கோவை, தேனி, நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, தேனி மற்றும் நீலகிரி போன்ற பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 15, 2019, 01:38 PM IST
கோவை, தேனி, நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை title=

சென்னை: கோவை, தேனி மற்றும் நீலகிரி போன்ற மலை சார்ந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தங்களின் அறிக்கையில் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை ஒட்டியுள்ள தமிழகம் மாவட்டங்களான கோவை, தேனி மற்றும் நீலகிரி போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும், ஏனைய உள்மாவட்டம் மற்றும் தென்மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை சில பகுதிகளில் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பநிலை இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது. 

தமிழகத்தில் அதிக அளவு மழைப் பொழிவு பெரம்பலூர் 8 செமீ மழையும், வால்பாறை பகுதியில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Trending News