மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 68000 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது!

Last Updated : Jul 28, 2018, 10:43 AM IST
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு! title=

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 68000 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது!

பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர்ன் அளவு விநாடிக்கு 68000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 100 அடியைக் கடந்துள்ளது. தொடர்ந்து அணையின் கொள்லளவு நிரம்பியுள்ளதால் சேலம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே வேலையில் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று இரவு 9 மணி நிலவரப்படி விநாடிக்கு 67000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 7 மணியவில் 64000 கனஅடியாக உள்ளது. இதனையடுத்து ஒகேனக்கல்லில் தொடர்ந்து 20-வது நாளாக அருவிகளில் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் தடை நீடிக்கப்படுள்ளது.

மேட்டூர் அணையினை பொருத்தவரை நீர்வரத்து 68500 கனஅடியாகவும், நீர்மட்டம் 120.30 அடி, நீர் இருப்பு 93.95 டிஎம்சியாவும் உள்ளது. இதனையடுத்து விநாடிக்கு 68000 கனஅடி வீதம் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

Trending News