கோவை சிவானந்தா காலனி பகுதியில் கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். திமுகவிற்கு போடுகின்ற ஓட்டு தான் மோடிக்கு வைக்கப் போகும் வேட்டு எனவும் தெரிவித்தார். 10 வருடத்திற்கு பிறகு உதயசூரியன் சின்னம் கோவையில் நிற்கிறது என தெரிவித்த அவர் இது உங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு எனவும் கோவை வெற்றி இந்தியாவின் வெற்றிக்கு முதல் வெற்றியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்த முறை கோவையில் குறைந்தது மூன்று லட்சம் ஓட்டு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் படிக்க | ஜிகே மணியிடம் பதவியை பிடுங்கியவர் அன்புமணி - எடப்பாடி பழனிசாமி வீசிய புதுகுண்டு
கோவையில் மெட்ரோ ரயில் கிரிக்கெட் ஸ்டேடியம் அனைத்தும் கண்டிப்பாக கொண்டுவரப்படும் எனவும் உறுதியளித்தார். மோடி ஆட்சிக்கு வரும் முன்பு கேஸ் சிலிண்டர் விலை 400 ரூபாயாக இருந்தது எனவும் தற்பொழுது 1200 ரூபாயாக உள்ளது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 75 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டர் 65 ரூபாய்க்கும் தரப்படும் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார் என தெரிவித்தார். கொரோனா காலத்தில் நம்மை வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்று மோடி கூறினார். ஆனால் தமிழக முதலமைச்சர் 4000 ரூபாய் கொடுத்தார். மகளிர் இலவச பணம் மூலம் 465 கோடி முறை மகளிர் பயணம் செய்து உள்ளதாகவும் கோவை மாவட்டத்தில் மட்டும் 27 கோடி முறை பயணம் செய்து உள்ளீர்கள் எனவும் தெரிவித்தார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெண்களுக்காக புதுமை பெண் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் கோவை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 14,000 மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இதை வழங்கப்பட்டு வருவதாகவும் அதேபோல் இந்தியாவில் முதல் மாநிலமாக காலை உணவு திட்டம் தமிழகத்தில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார். இதைக் கூறிக் கொண்டிருக்கும் பொழுது மகளிரின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது என தெரிவித்த அவர் மகளிர் உரிமைத் தொகை மூலம் 1 கோடியே 18 லட்சம் மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதாகவும் சில இடங்களில் வரவில்லை என்றால் அது சரி செய்யப்படும் என தெரிவித்தார். மோடியை இனிமேல் மோடி என்று அழைக்காதீர்கள் 29 பைசா என்று அழையுங்கள்.
தமிழகத்தில் இதற்கு முன்பிருந்த முதலமைச்சர் எப்படி முதலமைச்சர் ஆனார் என்று தெரியும் எனக் கூறிய அவர் டேபிளுக்கு அடியில் சென்று அந்த அம்மா(சசிகலா) காலை பிடித்து பிறகு அந்த அம்மாவையே காலை வாரி விட்டவர் எடப்பாடி பழனிச்சாமி என தெரிவித்தார். மேலும் நீட் தேர்வினால் இதுவரை 21 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்கள் எனவும் ஒரு குடும்பத்தையே நீட் தேர்வினால் இழந்து உள்ளோம் எனவும் தெரிவித்தார். தேர்தல் கணிப்புகள் திமுக 40 தொகுதிகள் இடம் ஜெயிக்கப் போகிறது என்று கூறிவிட்டார்கள் என்று தெரிவித்த அவர் கோவையில் நிச்சயமாக ஜெயிக்கும் எனவும் ஆனால் நான் கேட்பதெல்லாம் அதிகமாக வித்தியாசம் தான் என தெரிவித்தார்.
மதுரையில் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை என்று ஒற்றை செங்கல்லை எடுத்துக் காண்பித்தார். மாநில நிதி உரிமை மீட்க வேண்டும் என்றால் நல்ல பிரதமர் வரவேண்டும், அதேபோல் யார் பிரதமராக வரவேண்டும் என்பது முக்கியம் அல்ல யார் பிரதமராக வரக்கூடாது என்பது தான் முக்கியம். இன்றுடன் மைக்கை வைத்து பிரச்சாரம் முடிந்து விடும் அதன் பின் நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராக தனி தனியாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி திமுக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்து உரையை முடித்தார். 6 மணிக்கு முன்பு உரையை முடித்து விட்டு புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பிரதமர் மோடிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் எழுப்பியிருக்கும் 30 கேள்விகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ