இந்து கோயில்களுக்கு ஆதரவாக பல கருத்துக்களை வெளியிட்டு வருபவர் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன். அறநிலையத்துறையிடம் இருந்து இந்து கோயில்களை மீட்டு எடுக்க வேண்டும் என்றும், இந்து கோயில்களில் எந்த சாதியினரை சேர்ந்தவரும் அர்ச்சனை செய்யலாம் என்பதை இவர் கடுமையாக எதிர்த்து குரல் எழுப்பி வந்தார். அடிக்கடி இந்து கோயில்களின் பெருமை குறித்தும், சில சர்ச்சையான கருத்துக்கள் குறித்தும் அடிக்கடி இணையத்தில் சில பதிவுகளை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுவதில் இவர் வல்லவர். தற்போது இவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | தனியார் சொகுசு ஓட்டல் அதிபரை கடத்திய கும்பல் போலீசில் சிக்கியது எப்படி ?
Right now i am being attacjed by goon advocates at Trichy combined courts. I am in the chief court seeking asylum. pic.twitter.com/bItsce1r4R
— Rangarajan Narasimhan (@OurTemples) April 25, 2022
திருச்சி தலைமை நீதிமன்றத்திற்கு ஒரு கேஸ் விஷயமாக ரங்கநாதன் சென்ற போது அவருக்கும், வக்கீலுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு நீதிபதியிடம் இவர் தஞ்சமடைந்த சம்பவம் திகிலை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், வக்கீல் ஒருவர் இவரை அடித்துவிட, என்மேல் எப்படி நீங்கள் கை வைக்கலாம்? யார் நீ? என்று ஆக்ரோஷமாக ரங்கநாதன் நரசிம்மன் கூறுகிறார். பின்னர் அங்கு குழுமியிருந்த ஊழியர்கள் அவரது செல்போனை பறிக்க முயல்கின்றனர், அதனைத்தொடர்ந்து அவர் வேகமாக நீதிமன்றத்துக்குள் நுழைகிறார். நீதிமன்றத்தின் உள்ளே சென்றவர் நீதிபதியை சந்தித்து என்னை பத்து பேர் அடிக்க வருகிறார்கள், என்னை காப்பாற்றுங்கள் என்று கூறுகிறார்.
மேலும் கூறியவர் எனக்கு பாதுகாப்பு தாருங்கள், நான் பாதுகாப்பு வேண்டி உங்களிடம் தஞ்சமடைய வந்திருக்கிறேன் என்று கூறுகிறார். வெளியில் நான் போனால் என்னை கொன்றுவிடுவார்கள், எனக்கு பாதுகாப்பு தாருங்கள் என்று கெஞ்சுகிறார். இந்த சம்பவங்களை அவரே படம்பிடித்து தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதில் நான் வக்கீல் ஒருவரால் தாக்கப்பட்டேன், இப்போது தஞ்சம் தேடி நான் தலைமை நீதிமன்றத்தில் இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | மறைந்த நடிகர் விவேக் மனைவியின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, (https://www.facebook.com/ZeeTamilNews/) ட்விட்டரில் @ZeeTamilNews (https://twitter.com/ZeeTamilNews) மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews (https://t.me/ZeeTamilNew) என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR