நவ நாகரீகம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் போன்கள் உபயோகப்படுத்தாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு மனிதனின் மூன்றாம் கைபோல் மாறிவிட்டது ஸ்மார்ட் போன்கள். தகவல் தொடர்புக்கு மட்டும் பயன்பட்டு வந்த தொலைபேசிகள் தற்போது ஸ்மார்ட் வடிவில் மனிதனின் பல் வேறு வேலைகளையும் சுலபமாக ஆக்குகின்றன.
அத்தியாவசிய பொருளாக மாறிப் போன ஸ்மார்ட் போன்கள் சந்தைகளில் ரூ.5 அயிரம் முதல் லட்சங்களில் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் கோவையில் துவங்கப்பட்ட செல்போன் கடை ஒன்றில் வெறும் 101 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
காந்திபுரம் 9வது வீதியில் பிக்சல் கம்யூனிகேஷன் என்ற புதிதாக தொடங்கப்பட்ட செல்போன் கடையில் உபயோகப்படுத்தப்பட்ட செகண்ட் ஹேண்ட் செல்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கடையின் திறப்பு விழா சலுகையாக 3 ஆயிரம் ரூபாய்க்கு உபயோகப்படுத்தப்பட்ட ஒரு செல்போனை வாங்குபவர்கள் 101 ரூபாய் செலுத்தி ஸ்மார்ட் போனை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | Nothing Phone 1: வித்தியாசமான டிசைனில் நத்திங் ஃபோன் (1) ஃபர்ஸ்ட் லுக்
இது கோவை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் 101 ரூபாய் ஸ்மார்ட் போனை வாங்குவதற்கு இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் கூட்டம் கடை முன்பு அலைமோதியது. கோவை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த மக்கள் இந்த கடையில் ஸ்மார்ட் ஃபோனை வாங்கி சென்றனர்.
மேலும் படிக்க | Xiaomi-ன் சூப்பரான பேட்டரி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR