விஜயபாஸ்கரை கைது செய்ய வேண்டும்:- மு.க.ஸ்டாலின்

Last Updated : Aug 1, 2017, 11:57 AM IST
விஜயபாஸ்கரை கைது செய்ய வேண்டும்:- மு.க.ஸ்டாலின் title=

ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக கதிராமங்கலம் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை திமுக செயல் தலைவர்மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் வெளியே வந்து பேட்டி அளித்தார் அவர்:-

சிறையில் இருக்கும் பேராசிரியர் ஜெயராமனிடம் அவருடைய தந்தையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், என்னுடைய ஆறுதலையும் தெரிவித்தேன்.

சென்னை போலீஸ் கமி‌ஷனர் குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் போட வேண்டும் என்றால், குட்கா விவகாரத்தைப் பொறுத்தவரையில் முதலில் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள விஜயபாஸ்கரை தான் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

இப்போது டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுள்ள ராஜேந்திரனை கைது செய்ய வேண்டும். அடுத்ததாக, கமி‌ஷனராக இருந்த ஜார்ஜையும் கைது செய்து விட்டு, அதை விற்றுக் கொண்டிருப்பவர்களை எல்லாம் கைது செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

மேலும் விஜயபாஸ்கர் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோருவதற்காக டெல்லி போவது போல் எனக்குத் தெரியவில்லை. அவரது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கக் கூடிய வருமான வரித்துறை வழக்கு, குட்கா வழக்கு ஆகியவற்றில் இருந்து தப்பித்துக் கொள்ள சென்று வருகிறார் என்று தான் நான் நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Trending News