சிவகங்கை மதிமுக அலுவலகத்தில் கட்சி செயல்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட செயலாளர் சிவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இவர்கள் மதிமுக தலைமைக்கு எதிரான கருத்துக்களை கூறியுள்ளனர். இதனால், மதிமுகவை பிளவுபடுத்த முயற்சிப்பதாக கூறி முன்னாள் தேர்தல் பணிக்குழு செயலாளர் பாலுச்சாமி, மாவட்ட துணைசெயலாளர் சார்லஸ், நகரச் செயலாளர் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன், வைகோ வாரிசு அரசியலுக்கு எதிராக மதிமுக கட்சியை ஆரம்பித்து விட்டு தனது வாரிசை பதவியில் அமர வைத்துள்ளார் என குற்றம்சாட்டினார். 28 ஆண்டு காலம் கட்சியில் உழைத்தவர்களுக்கு மதிமுக மதிப்புக் கொடுக்கவில்லை, மறைமுக பேரம்பேசி மதிமுகவை.திமுகவுடன் இணைக்க முயற்சி நடந்து வருகிறது எனவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனால் கூட்டம் நடைபெற்ற இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மதிமுக மற்றும் வைகோவுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்களை உடனடியாக கூட்டத்தில் இருந்து வெளியேற்றுமாறு கூறி அங்கிருந்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், கட்சியில் இருந்து நீக்காதவர்களை, மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து வெளியேற்ற முடியாது என காவல்துறையினர் கூறிவிட்டனர். இதனைத் தொடர்ந்து கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அதிருப்தி நிர்வாகிகளுக்கு எதிராக கோஷமிட்டு கலைந்து சென்றனர். மதிமுக உட்கட்சி பூசல் அதிகரித்திருப்பதால், கட்சி பிளவுபெற வாய்ப்புள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | ”வேண்டும் வேண்டும் ஆண்களுக்கும் இலவச பேருந்து சேவை வேண்டும்”
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR