மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர், பிரதமர் மோடி தமிழகத்தை பொறுத்தவரை பாராமுகமாகவே இருப்பதாக தெரிவித்தார். அவர் கொடுத்த பேட்டி பின்வருமாறு:
“2015 ஆம் ஆண்டு மழை வெள்ளம் தாக்கிய போது அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனால் இந்த முறை வரலாறு காணாத மழை பெய்த போதும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்கூட்டியே திட்டமிட்டு தக்க நடவடிக்கைகள் எடுத்ததால் சென்னையில் பெருமளவு பாதிப்புகள் குறைந்துள்ளது”
தொடர்ந்து பேசிய அவர், “இரண்டாவது முறையாக தென் மாவட்டங்களை மழை வெள்ளம் தாக்கியதில் ஏராளமான குடும்பங்கள் எல்லாவற்றையும் இழந்து மிகவும் பரிதாபமான நிலையில் நிற்கின்றனர். இதனை சரி செய்வதற்காக மாநில அரசுக்குள்ள சக்திகளை எல்லாம் பயன்படுத்தி உள்ளனர்” என்றார். மேலும், “தமிழக அரசு ஒன்றிய அரசிடம் கேட்ட நிதியை கொடுக்கவில்லை, ஆனால் பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் அவர்களின் தேவைக்கு அதிகமாகவே நிதியை தருகிறார்கள்.
மேலும் படிக்க | ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் கதவு திறப்பு!
ஒரு கண்ணிலே வெண்ணையும் பாஜக அல்லாத மாநிலங்களில் சுண்ணாம்பை கண்ணில் வைப்பது போல பத்தில் ஒரு பங்கை தருகிறார்கள். பிரதமரை போற போக்கில் பார்த்து செல்வதாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் நம்முடைய முதலமைச்சரை சொல்லி இருக்கிறார் ? போற போக்கில் பார்க்க பிரதமர் என்ன வழிப்போக்கரா ?” என்று கேள்வி எழுப்பினார்.
“பிரதமர் பாராமுகமாகவே இருக்கிறார்..”
மழை வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் துன்பத்தில் துடித்துக் கொண்டிருக்கும் போது நிவாரணத்திற்காக பிரதமரை சந்திக்க சென்ற தமிழக முதல்வரின் காலை நேரத்தை மாற்றி இரவு சந்திக்கலாம் என்று சொல்வது பிரதமரின் பொறுப்பேற்ற தன்மையை காட்டுவதாக வைகோ தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை பிரதமர் பாராமுகமாகவே இருக்கிறார் என்றும் வைகோ கூறினார்.
அரசு குறித்து பேசிய வைகோ..
தொடர்ந்து பேசிய வைகோ, தமிழக அரசு மக்களுடைய கஷ்ட நஷ்டங்களை போக்குவதற்கான முயற்சிகளில் முழுமூச்சாக செயல்பட்டு வருவதாக கூறினார். மேலும், மின்சாரம் பழுதுபட்ட பல இடங்களில் எல்லாம் தற்போது சரி செய்யப்பட்டு இருக்கிறது. தென் மாவட்டங்களில் பெரிய பாதிப்பு என்பதால் தமிழக அரசு திட்டமிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.
தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கேள்விக்கு அந்தந்த மாநிலங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களை பேரிடராக அறிவிக்கலாம். 146 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது தான் முதல் முறை ஒன்றிய மோடி அரசு ஜனநாயகத்தை படுகொலை செய்திருக்கிறது என வைகோ தெரிவித்தார்.
மேலும் படிக்க | 'நான் ஏதாவது கெட்ட வார்த்தை பேசினேனா...' நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி பதிலடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ