கோவை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், " தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்ற, ஏற்படுத்திய பாஜகவின் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில் பாரத பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.
மேலும் படிக்க | கன்னியாகுமரி எம்.பி. சீட் யாருக்கு? விஜயதரணி பாஜகவில் இணைந்ததால் களேபரம்!
தமிழக அரசியலில் இது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் செய்யாத அளவிற்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக இது இருக்கும். தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரைக்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பேராதரவும் அன்பும் கிடைத்துள்ளது.
பாஜக அரசின் கடந்த பத்தாண்டு கால சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வதோடு, தமிழகத்தை ஆளும் திமுக அரசின் இயலாமையையும் ஊழல்களையும் மக்களிடத்தில் எடுத்து கூறியுள்ளோம். தமிழகத்தில் போதை பொருட்கள் பழக்கம் மிக அதிகமாகியுள்ளது. குறிப்பாக கஞ்சா அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. சுமார் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்தலில் திமுக நிர்வாகி ஈடுபட்டிருப்பது வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. அவர்கள் மீது தமிழக முதல்வர் ஸ்டாலின் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சியினர் மற்றும் பலர் நாளை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். பாஜகவில் இணைய உள்ளவர்கள் யார் யார் என்பதை நாளை தெரிந்து கொள்ளலாம்" என தெரிவித்தார். இப்போதைய தகவல்களின்படி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினும், கோவை மாநகராட்சி முன்னாள் மேயருமான வேலுச்சாமி பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சென்னையை உலுக்கிய ஆணவக் கொலை... மனதை அதிர வைக்கும் தகவல்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ