கடந்த வருடம் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான தேர்தல் இந்த மாதம் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 50.32 சதவீதம் வாக்குகள் பெற்று டிடிவி தினகரன், ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிகம் பெற்றார்.
இந்நிலையில், வரும் 29-ம் தேதி டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்க உள்ளார். சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
தொடர்ந்து வெற்றி பெறுவேன்: டி.டி.வி தினகரன் பேட்டி!
முதன் முறையாக டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.வாக தமிழக சட்டசபைக்குள் நுழைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.