தக்காளி விலை ஏறியதா இறங்கியதா..? ஒரு கிலோ எவ்வளவு..? இன்றைய நிலவரம் இதுதான்..!

Tomato Price Today In Chennai: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருந்தது. இந்த நிலையில், இன்று அதன் விலையில் மாற்றம் இருக்கிறதா..? இல்லையா..?   

Written by - Yuvashree | Last Updated : Aug 9, 2023, 10:43 AM IST
  • தக்காளி விலையில் இன்று மாற்றமா..?
  • கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை என்ன..?
  • பிற காய்கறி விலை நிலவரம் இதோ!
தக்காளி விலை ஏறியதா இறங்கியதா..? ஒரு கிலோ எவ்வளவு..? இன்றைய நிலவரம் இதுதான்..!  title=

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தக்காளியின் விலை கடந்த சில வாரங்களாக தாறுமாறாக ஏறியது. சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளி ஒரு கிலோவிற்கு 200 ரூபாய் வரை விற்கப்பட்டிருந்தது. 

தக்காளி விலை உயர்வு!

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் முழுவதும் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்தது. சில வாரங்களாகத்தான் தக்காளியின் வரத்தை பொறுத்து அதன் விலை ஏறுமுகம் இறங்குமுகமாய் உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இன்று இருக்கும் தக்காளி விலை நாளை இருப்பதில்லை. கிலே ஒன்றிற்கு 30-40 ரூபாய்க்கு விற்ற தக்காளி, சில நாட்களுக்கு முன்பு வரை சில்லறை விற்பனையில் 200 ரூபாய் வரை விற்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளியின் விலை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ 150 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆனால் கடந்த 4 நாட்களாக தக்காளியின் விலை ஆங்காங்கே கணிசமாக குறைந்து வருகிறது. கிலோவிற்கு 30 ரூபாய் குறைந்து 120 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்கப்பட்டது. இதில், அந்தந்த ரகங்களை பொருத்து தக்காளியின் விலையில் மாற்றங்கள் ஏற்படுவதாக கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் தெரிவித்தருந்தனர். 

மேலும் படிக்க | டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறாரா செந்தில் பாலாஜி... அமலாக்கத்துறையின் திட்டம் என்ன?

இன்றைய விலை நிலவரம் இதுதான்!

நேற்றுவரை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை கிலோ ஒன்றிற்கு 90 ரூபாயாக விற்கப்பட்டது. இன்று, இந்த விலையில் மாற்றமில்லை. அதே 90 ரூபாய்க்கே ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. முன்னர் இருந்ததை விட, தக்காளியின் வரத்து இரண்டு நாட்களாக அதிகரித்துள்ளதுதான் இந்த விலை மாற்றத்திற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், நவீன் தக்காளி எனும் ஒரு ரக தக்காளி மட்டும் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

விலை உயர்வுக்கான காரணம்..

தக்காளியின் விலை கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்தது காணப்பட்டது. இதற்கு காரணம் இந்த ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தக்காளி விவசாயிகள் பலர் தக்காளி பயிரிடுவதை விட்டுவிட்டு வேறு காய்கறிகளை பயிரிட்டதுதான் என சில ஆய்வுகள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு காரணம், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூச்சுகளின் தாக்குதலால் தக்காளி பழுதடைந்து அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில்தான் தக்காளி அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த இடங்களில் இருந்துதான் பிற மாநிலங்களுக்கும் தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது. 

பலத்த மழை..

வட இந்திய மாநிலங்களில் கடந்த மாதம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தக்காளி உள்பட பல காய்கறிகளை சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதுவும் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. தற்போது அந்த நிலை மாறி அனைத்து மாநிலங்களுக்கும் ஒழுங்காக காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. அதனால் அவற்றி வரத்தும் எல்லா பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில நாட்களிலேயே தக்காளியின் விலை பழைய நிலைக்கு திரும்பி விடும் என கூறப்படுகிறது. 

காய்கறி விலை நிலவரம்:

கோயம்பேட்டில் இன்று தக்காளி மட்டுமன்றி வேறு சில காய்கறிகளின் விலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் முழு விவரம், இதோ. 

>பச்சை குடைமிளகாய் ஒரு கிலோவுக்கு 60  ரூபாய்க்கும் சிகப்பு குடைமிளகாய் கிலோவிற்கு 180 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. 

>பெரிய வெங்காயம் கிலோ ஒன்றிற்கு சுமார் 25 ரூபாயாகவும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 

>சிறிய உருளைக்கிழங்கு கிலோவுக்கு 60 ரூபாயாகவும் பெரிய உருளைகிழங்கு ஒரு கிலோவுக்கு 32 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 

>அவரைக்காய் ஒரு கிலோ 40  ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பீட்ரூட் மற்றும் கத்திரிக்காய் ஒரு கிலோவிற்கு தலா 40  ரூபாயாக விற்கப்படுகிறது. 

>கேரட் ஒரு கிலோவுக்கு 50 ரூபாயாகவும் பீன்ஸ் ஒரு கிலோவுக்கு சுமார் 100 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. இதன் விலையில் பல நாட்களாக மாற்றம் இல்லை. 

>பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. 

மேலும் படிக்க | அறையில் புகுந்த திருடர்... அசந்து தூங்கிய பேச்சிலர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News