வெளியானது குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள்!!

குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகளை இன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

Last Updated : Dec 9, 2019, 02:13 PM IST
வெளியானது குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள்!! title=

குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகளை இன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

தமிழகம் முழுவதும் உதவி மாவட்ட ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இதில், நடப்பு ஆண்டில் 181 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 

இதற்காக கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

Trending News