டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பு என்னவென்றால், விரைவில் நடத்த இருக்கும் பொறியியல் சார்நிலை பணி தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 27.05.2023 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இதற்கான தேர்வை நடத்துகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டை தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in இணையதள பக்கத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்துக்கு சென்று, விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு முகப்புப் பக்கம் (OTR DASHBOARD) வழியாக மட்டுமே விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும். இதற்கு விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி பதிவேற்றிய தகவல்களை வைத்து லாகின் செய்து கொள்ளலாம்.
ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?
* TNPSC இணையதளதிற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
* OTR டேஷ்போர்டுக்குள் சென்று உங்கள் பதிவு எண் மற்றும் பாஸ்வோர்டை உள்ளீடு செய்யவும்.
* OTR லாகின் செய்த பிறகு நீங்கள் விண்ணப்பித்திருக்கும் TNPSC தேர்வுக்கான ஹால் டிக்கெட் உங்கள் டேஷ்போர்டில் காணப்படும்.
* அதை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
தேர்வு எழுத செல்லும்போது மறக்காமல் ஹால்டிக்கெட்டை எடுத்துக் செல்லுங்கள்.
மேலும் படிக்க: கர்நாடகா: முதல்வர் சித்தராமையாவுக்கு முன் இருக்கும் 5 முக்கிய சவால்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ