TNGIM 2024: உலக முதலீட்டாளர்கள் மாநாடு... எந்த நிறுவனம் எவ்வளவு முதலீடு? மொத்த வேலைவாய்ப்புகள் எத்தனை?

Tamil Nadu Global Investors Meet 2024: உலக முதலீட்டாளர் மாநாட்டில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடுகளை செய்கின்றன, எவ்வளவு வேலைவாய்ப்பை தமிழ்நாடு பெறும் உள்ளிட்ட முழு விவரங்களையும் இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 8, 2024, 07:00 PM IST
  • 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
  • 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
  • 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு
TNGIM 2024: உலக முதலீட்டாளர்கள் மாநாடு... எந்த நிறுவனம் எவ்வளவு முதலீடு? மொத்த வேலைவாய்ப்புகள் எத்தனை? title=

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் 'தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு' (Tamil Nadu Global Investors Meet 2024) நேற்றும் (ஜன. 7), இன்றும் (ஜன. 8) நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், உலகளவில் நாடுகளில் இருந்தும், நிறுவனங்களிலும் இருந்தும் இதில் பங்கேற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநாட்டை நேற்று தொடங்கிவைத்த நிலையில், இன்று நிறைவு விழாவிலும் பங்கேற்று உரையாற்றினார். 

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,"2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய்க்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது" என்றார். மேலும், 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைகள் உருவாக்கப்பட்டு அதில், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், முதல் நாளான நேற்றே சுமார் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. 

அந்த வகையில், இந்த இரண்டு நாள் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் முழு விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன் தகவல்கள் சற்று விரிவாக பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.   

மேலும் படிக்க | TNGIM 2024: தமிழ்நாட்டில் பணத்தை கொட்டும் முகேஷ் அம்பானி... அடுத்த வாரமே வருகிறது டேட்டா சென்டர்!

1. High Glory Footware என்ற நிறுவனம் அதன் தோல் அல்லாத காலணி தொழிற்சாலையை கள்ளக்குறிச்சியில் அமைக்க உள்ளது. இதில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன் மொத்த முதலீடு 2302 கோடி ரூபாய் ஆகும். 

2. Zhong என்ற நிறுவனம் அதன் தோல் அல்லாத காலணி தொழிற்சாலையை பெரம்பலூரில் அமைக்க உள்ளது. இதில் 150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன் மொத்த முதலீடு 48 கோடி ரூபாய் ஆகும். 

3. Feng Tay என்ற நிறுழனம் Crocs வகையில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலையை விழுப்புரத்தில் அமைக்க உள்ளது. இதில் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதன் மொத்த முதலீடு 500 கோடி ரூபாய் ஆகும். 

4. CPCL நிறுவனம் பெட்ரோகெமிக்கல் திட்டத்தை சுமார் ரூ.17 ஆயிரம் கோடி முதலீட்டில் நாகப்பட்டினத்தில் அமைக்க உள்ளது. இதில் 2,400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 

5. Hitachi Energy நிறுவனம் அதன் உலகாளவிய மையத்தை சென்னையில் அமைக்க உள்ளது. இதில் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். சுமார் ரூ.100 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. 

6. Mahindra Orgins Phase 2 மற்றும் Mahindra Holidays and Resorts அதன் தொழிற்பூங்காவை திருவள்ளூர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்களில் அமைக்க உள்ளது. இதில் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதில் 1800 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. 

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெறும்: அண்ணாமலை

7. L&T Innovation Campus அதன் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் புத்தாக்க மையத்தை சென்னையில் தொடங்க உள்ளது. இதில் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதில் ரூ.3500 கோடி முதலீடு செய்யப்படுகிறது. 

8. காவேரி மருத்துவமனை தமிழ்நாடு முழுவதும் அதன் பன்நோக்கு மருத்துவமனையை அமைக்க உள்ளது. இதன் மூலம் 750 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் ரூ.1200 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. 

9. Royal Enfield அதன் இரு சக்கர வாகன பாகத்தின் உற்பத்தி ஆலையை காஞ்சிபுரத்தில் தொடங்க உள்ளது. இதன்மூலம், 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் ரூ.3000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. 

10. Stellantis Group என்ற நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார் வாகன உற்பத்தி ஆலோயை திருவள்ளூரில் தொடங்க உள்ளது. இதில் ரூ.2000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. 

11. TAFE நிறுவனம் அதன் ஆட்டோமேட்டிக் இயந்திர உற்பத்தி ஆலையை சென்னையில் தொடங்க உள்ளது. இதில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். ரூ.500 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. 

12. Hinduja Group (Ashok Leyland) தமிழ்நாடு முழுவதும் அதன் ஆட்டோமேட்டிக் இயந்திர உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால், 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் ரூ.2500 கோடி முதலீடும் செய்யப்படுகிறது. 

மேலும் படிக்க | அடுத்த ஆண்டு இந்தியர்கள் விண்வெளியில் பறப்பார்கள்!

13. Microsoft India அதன் தரவு மையத்தை (Data Centre) சென்னையில் தொடங்க உள்ளது. இதில் 167 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ரூ.2,740 கோடி முதலீடு செய்யப்படுகிறது. 

14. Tata Chemicals நிறுவனம் சிறப்பு கெமிக்கல் தயாரிப்பு ஆலையை ராமநாதபுரத்தில் நிறுவ உள்ளது. இதில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதில் ரூ.1000 கோடி முதலீடு செய்யப்படுகிறது. 

15. Caplin Point அதன் மருந்து உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் நிறுவ உள்ளது. இதில் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதில் ரூ.700 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. 

16. Tata Power Renewable Energy என்ற  புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் முதலீடு செய்கிறது. அதாவது சுமார் ரூ.70 ஆயிரத்து 800 கோடி அளவில் முதலீடு செய்கிறது. இதில் 3800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் மூலம் பெறப்பட்ட முதலீடுகளில் இதுதான் அதிகபட்ச முதலீடாகும். 

17. Jam Infra என்ற நிறுவனம் Aerospace தொழிற்சாலை திருச்சியில் அமைக்கப்பட உள்ளது. இதில் 800 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. ரூ.1000 கோடி முதலீடு செய்யப்படுகிறது. 

மேலும் படிக்க | உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு! எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்?

18. Ramkrishna Titagarh Rail Wheels என்ற நிறுவனம் ரயில் சக்கரங்களை உற்பத்தி செய்யும் ஆலையை திருவள்ளூரில் அமைக்க இருக்கிறது. 1400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் ரூ.1850 கோடி முதலீடு செய்யப்படுகிறது.    

19. Festo India நிறுவனம் கிருஷ்ணகிரியில் சுமார் ரூ.520 கோடியில் முதலீடு செய்து 2000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளது. 

20. Fanuc India என்ற நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் ரோபோட்டிக் சார்ந்த மையத்தை தொடங்க ரூ.55 கோடியை முதலீடு செய்கிறது. இதில் 75 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். 

21. ENES Ramaraj நிறுவனம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதன் ஜவுளி ஆலையை தொடங்க உள்ளது. இதில் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். சுமார் ரூ.1000 கோடி முதலீடு செய்யப்படுகிறது. 

22. Shahi Exports நிறுவனம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதன் ஜவுளி ஆலையை தொடங்க உள்ளது. இதில் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுமார் ரூ.1000 கோடி முதலீடு செய்யப்படுகிறது. 

மேலும் படிக்க | தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீடு... வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் - முழு பின்னணி இதோ!

23. அதானி குழுமத்தின் அதானி Total Gas மற்றும் CNG உற்பத்தி ஆலை அமைக்கப்படுகிறது. ஆனால், இடம் இறுதிசெய்யப்படவில்லை. சுமார் ரூ.1568 கோடி முதலீடு செய்யப்படுகிறது. 300 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 

24. அதானி குழுமத்தின் அதானி Connex ஆலை அமைக்கப்படுகிறது.  ஆனால், இடம் இறுதிசெய்யப்படவில்லை. சுமார் ரூ.13 ஆயிரத்து 200 கோடி முதலீடு செய்யப்படுகிறது. 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 

25. அதானி குழுமத்தின் அம்புஜா சிமெண்ட் ஆலை அமைக்கப்பட உள்ளது. ஆனால் இடம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இதில் ரூ.3500 கோடி முதலீடு செய்யப்படுகிறது. 5000 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 

26. அதானி குழுமத்தின் அதானி Green Energy ஆலை அமைக்கப்பட உள்ளது. ஆனால் இடம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. அதில் ரூ.24 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதில் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 

27. Shell Market India அதன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தொடங்க உள்ளது. இதில் ரூ.1070 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. மேலும், இதில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 

இவை மட்டுமின்றி, மாநாட்டிற்கும் முன்பே பல முதலீடுகள் உறுதியாகி நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விவரங்களும் கீழே உள்ள இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | உலக முதலீட்டாளர்கள் மாநாடு: கோடி கோடியாய் தமிழகத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் லிஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News