+2 தேர்வு: தமிழ் மொழியில் 200-200 சென்டம் யாரும் வாங்கவில்லை

Last Updated : May 12, 2017, 02:06 PM IST
+2 தேர்வு: தமிழ் மொழியில் 200-200 சென்டம் யாரும் வாங்கவில்லை  title=

 

இந்த வருடம் மொழி பாடத்தில், 200-க்கு 200 மதிப்பெண் வழங்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனவே தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடத்தில் மாணவர்கள் எவரும் 200க்கு 200 மதிப்பெண் பெறவில்லை.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியானது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவில் கணிதப் பாடத்தில் அதிக அளவில் 3,656 மாணவ-மாணவிகள் 200-200 பெற்று அசத்தியுள்ளனர். கணக்கு பதிவியல் பாடத்தில் 5597 பேர் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

200-200 மதிப்பெண் பாட வாரியான விவரம்:-

கணினி அறிவியல் 1,647

வேதியியல் - 1,123

உயிரியல்- 221

இயற்பியல் - 187

தாவரவியல்- 22

விலங்கியல்-4 

கணக்கு பதிவியல் - 5597, 

வணிகவியல் - 8301, 

வரலாறு - 336, 

பொருளாதாரவியல் - 1,717 

இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடத்தில் மாணவர்கள் எவரும் 200க்கு 200 மதிப்பெண் பெறவில்லை.

Trending News