TN Weather Update: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 4, 2021, 11:07 AM IST
TN Weather Update: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை title=

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre, Chennai) தெரிவித்துள்ளது. அதேபோல இந்திய வானிலை மையத்தின் படி, அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி (Tamil Nadu and Puducherry) மற்றும் காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre, Chennai) கூறியதாவது., தமிழகத்தில் இன்று நீலகிரி, தேனி ,திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 

ALSO READ | செப்டம்பர் 6 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்

அதேசமயம் நாளை நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களிலும் செப்டம்பர் 6 மற்றும் செப்டம்பர் 7ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் இன்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில் ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை நேற்று பெய்த நிலையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் ஐந்து நாட்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று (செப்டம்பர் 2) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 சென்டிமீட்டர் சராசரி மழையும், திருவண்ணாமலை மாவட்டத்தின் கலசப்பாக்கத்தில் 12 செ.மீ. திருவண்ணாமலை மாவட்டத்தின் போளூரில் சராசரியாக 6 செமீ மழை பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தின் தொண்டி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் ஆகிய இடங்களில் நேற்று (வியாழக்கிழமை) சராசரியாக 5 செமீ மழை பெய்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் ஏத்தாப்பூரில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றும் சென்னை வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | இடா புயல் எதிரொலி - சாலைகளில் கரை புரண்டோடும் வெள்ளம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News