ஷுப்மான் கில் சமீப காலமாக அவ்வளவு சிறப்பாக விளையிடவில்லை. இந்நிலையில் ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் பதிவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு சென்றாதல் ஐபிஎல் 2024ல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது கேப்டன்சியின் கீழ் அணி தோல்விகளை சந்தித்தது.
இந்நிலையில் ஐபிஎல் 2025ல் கில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் நியமிக்கப்படலாம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது சமூக வலைதள பக்கத்தில் ரஷித் கான் கரும்பலகையின் முன் நிற்பது போன்ற புகைப்படத்தை பதிவித்துள்ளனர். அதில் புதிய தொடக்கம் என்று எழுதி உள்ளனர்.
இதனால் சுப்மான் கில் கேப்டன்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை அணி நிர்வாகம் வெளியிடவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ப்ளேயிங் லெவனில் இருந்து ஷுப்மான் கில் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றார்.
மேலும் சமீபத்திய டி20 தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பெறவில்லை. 2024 டி20 உலக கோப்பையிலும் ஷுப்மான் கில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.