ஜூலை மாதத்திற்கான தண்ணீரை காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை

தமிழ் நாட்டிற்கு தேவையான ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து உடனடியாக திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 14, 2020, 06:40 PM IST
ஜூலை மாதத்திற்கான தண்ணீரை காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை title=

சென்னை: தமிழ் நாட்டிற்கு தேவையான ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து உடனடியாக திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் (Cauvery Water Management Authority) குழுவின் 30ஆவது கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. 

மேலும் கர்நாடக (Karnataka government) சார்பில் காவிரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் “திருப்தியற்றது”. அதேநேரத்தில் மேட்டூர் அணையில் சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரின் அளவு ஒரு மாதத்திற்குள் அதன் மொத்த திறனில் பாதிக்கும் குறைவாகவே குறைந்து வருவதால் தமிழகம் சிக்கலில் சிக்கக்கூடும் எனவும்  காவிரி நீர் கட்டுப்பாட்டுக் குழு  30ஆவது கூட்டத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

தமிழ்நாட்டில் (TN GOVT) காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி திறந்து வைத்தார்.

ALSO READ | ஜல் சக்தி துறையின் கீழ் காவிரி ஆணையம்; மாநில உரிமையை பறிக்கும் செயல் 

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி., ஜூலைக்கு 31.24 டி.எம்.சி என மொத்தம் 40.43 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும். ஆனால் இன்னும் முழுமையான நீரின் அளவு தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. என்று ஜூன் 10-ஆம் தேதி காணொலி வழியாக நடைபெற்றக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் (Cauvery Water Management Authority) ஆணையிட்டது.

கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவு 114.5 டி.எம்.சி.டி. ஆக உள்ளது. 

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மேட்டூர் (Mettur Dam) நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் ஆல்வு 257 கனஅடி ஆகும், மொத்த சேமிப்பு 40.81% ஆக உள்ளது. பருவமழை காவிரி பிராந்தியத்தில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்யவில்லை என்றால், வரும் மாதங்களில் நிலைமை மோசமாக இருக்கும் என்று தமிழக அதிகாரி ஒருவர் கூறினார். அதேநேரத்தில் வயநாடு மற்றும் கபினி பிராந்தியங்களில் நல்ல மழைப்பொழிவு காரணமாக் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கைப் பெற உதவும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

ALSO READ | தமிழக விவசாயிகளைக் கடுமையாக வஞ்சித்து வரும் அதிமுக அரசு

Trending News