'குடி' மகன்களுக்கு குட்நியூஸ் வழங்கியுள்ள தமிழக அரசு..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து நாளை முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள்  திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 31, 2021, 04:51 PM IST
'குடி' மகன்களுக்கு குட்நியூஸ் வழங்கியுள்ள தமிழக அரசு..!! title=

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து தமிழகத்தில், பல விதமான தளர்வுகளுடன் நவம்பர் மாதம் 15 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளும் நேரடி வகுப்புகளை தொடக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், பண்டிகை காலம் என்பதால்  பொதுமக்கள் தேவையை கருத்தில் கொண்டு, அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் இரவு 11.00 மணிவரை இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.  மேலும், திரையரங்குகள் 100 சதவீதம் பார்வையாளர்களுடன் செயல்படவும்அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான  வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ALSO READ | ரஜினிகாந்த் அண்ணாத்த பார்க்க தியேட்டருக்கு வருவார்:  ஒய். ஜி. மகேந்திரன்

இதற்கிடையில்,  மதுபிரியர்களுக்கு ஓர் நற்செய்தியாக நாளை முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள்  திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் ‘குடி’ மகன்கள் உற்சாகத்தில் உள்ளனர். டாஸ்மாக் பார்கள் நாளை முதல் இயங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள  நிலையில், மதுப் பிரியர்கள், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளி பின்பற்றி,  அமர்ந்து மது அருந்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என பார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

பார்களின் நுழைவாயிலில் சானிடசைர்கள்  வைக்கப்படவேண்டும் எனவும், பாருக்கு   மது அருந்த வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்து கொள்ள வேண்டும் எனவும், மாஸ்க் அணியாமல் வருபவர்களை  அனுமதிக்க கூடாது உள்ளிட்ட சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

ALSO READ | ராகவா லாரன்ஸின் பிறந்தநாளன்று புதிய திரைப்பட அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News