COVID-19 Update ஜூலை 20: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 1904

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்தனர்.தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2,27,283 ஆக உள்ளது...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 21, 2021, 08:12 PM IST
COVID-19 Update ஜூலை 20: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 1904  title=

சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1904 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,39,277 ஆக உயர்ந்துள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்தனர். இதனுடன் சேர்த்து  தமிழகத்தில்  கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,762 ஆக அதிகரித்துள்ளது.  

தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 2,439 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 24,78,778 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரம்: 
• இன்றைய பாதிப்பு - 1,904

• இன்றைய மரணங்கள் - 30

• மொத்த பாதிப்பு - 25,39,277

• இன்றைய டிஸ்சார்ஜ் - 2,439 

• இன்று செய்யப்பட்ட மொத்த கொரோனா சோதனைகள் - 1,33,149

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஜூன் மாதம் முதல் தினசரி பாதிப்பு குறைந்து கொண்டே வந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததுடன், தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டது. இவ்வாறான கடுமையான கட்டுப்பாடுகளால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக சரிந்தது.  

Also Read | Monkey B Virus: தொற்று அறிகுறிகள், சிகிச்சை, பிற முக்கிய விபரங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News