சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று முதல் முறையாக தலைமை செயலகம் வந்தார்.
பரப்பரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த 18-ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார்.
இந்நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச்செயலகம் வந்தார். இதையொட்டி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தலைமைச் செயலகம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் முறையாக தலைமைச் செயலகம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலக அதிகாரிகள் வரவேற்றனர்.
இன்று தலைமைச் செயலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி ஐந்து முக்கிய கோப்புக்களில் கையெழுத்து இட்டார்.
500 மதுபான கடைகள் மூடல்.
உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 50% மானியம், ஆண்டொன்றுக்கு ரூ.200 கோடி செலவில் இந்த திட்டத்தை செயல் படுத்த திட்டம்.
ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு நிதி உதவி திட்டம்.
மகப்பேறு நிதி உதவி ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ. 18 ஆயிரமாக உயர்வு.
ஆண்டுக்கு 6 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி வழக்கும் திட்டம்.
மீனவர்களுக்கு தலா ரூ.1,70,000 மதிப்பிலான 5,000 வீடுகள் கட்டித்தரப்படும்.
வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை இரு மடங்காக உயர்வு.
வேலையில்லா இளைஞர்கள் ஓய்வூதியத்தை உயர்வு.