வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்: முல்லைவேந்தன்

முன்னாள் அமைச்சர் அன்பழகன் வீட்டில் சோதனை நடைபெறும் இடத்தில் ஏராளமான அதிமுகவினர் குவிந்துள்ளனர். அதே போல் அதிமுக நிர்வாகிகளும் வந்துள்ளனர். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 20, 2022, 03:39 PM IST
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்: முல்லைவேந்தன்  title=

தருமபுரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் வீடு மற்றும் அவரது உறவினர், ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் கடைகளில் இன்று லஞ்ச ஒழிப்புதுறையினர் 53 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அன்பழகன் வீட்டில் சோதனை நடைபெறும் இடத்தில் ஏராளமான அதிமுகவினர் குவிந்துள்ளனர். அதே போல் அதிமுக நிர்வாகிகளும் வந்துள்ளனர். 

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் சோதனை நடைபெறும் இடத்திற்கு வந்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், " பொய் பிரச்சாரங்களை ஏவிவிட்டு மீடியாக்களை பயன்படுத்தி தேவை இல்லாத சோதனைகளை நடத்துகிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் (MK Stalin) அவர்கள் தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகளை சொன்னாரோ அதை நிறைவேற்றவில்லை. பொங்கல் நாளில் பொங்கல் பரிசாக 5000 ரூபாய் அறிவித்தார், வரும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு ரூபாய் கூட தரவில்லை. 

பொங்கல் தொகுப்பு பரிசாக குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார், அதையும் தரவில்லை. கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து என்று சொன்னார் எதையுமே செய்யவில்லை. இதை மட்டும் செய்யவில்லை என்பதைவிட மொத்தத்தில் அவர் எதையுமே செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும். 

குறிப்பாக இந்த மாவட்டத்தில் உள்ள தூள் செட்டி  ஏரியில் தண்ணீர் கொண்டு வருகிறேன் என்று சொல்லி நேரிலேயே சென்று கூட்டம் போட்டு நாடகமாடினார். ஆக இவையெல்லாவற்றையும் மறைப்பதற்கு இப்படி எல்லாம் செய்கிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. அதிமுகவினர் சொன்னதை செய்தார்கள். இது பொய்யானவர்கள் ஆட்சிக்கு வந்திருப்பதை அம்பலப்படுத்துகிறது. 

ALSO READ | முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

இந்த நேரத்தில் நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்ற காரணத்தால் அதை மூடி மறைப்பதற்காக திசை திருப்புவதற்காக பொங்கல் நாளில் ஒவ்வொருவரும் எங்கே ஆயிரம், எங்கே தரமான பொருட்கள், கல்விக் கடன் தொகை, எங்கே நகை கடன் தள்ளுபடி செய்தார் என்று கேள்வி கேட்க ஆரம்பித்த காரணத்தால் இதை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தலைவர்களை குறிவைத்து தாக்குகின்றனர். 

லஞ்ச ஒழிப்பு சோதனை என்கிற பெயரால் இந்த அடக்குமுறை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட அடக்குமுறையின் மூலம் மக்களை திசை திருப்புவதற்காக ஒரு நாடகம்தான் ஸ்டாலின் இப்போது நடத்திக்கொண்டிருக்கிறார்.

நாடகம் நடத்துவதில் பொய் பிரச்சாரம் செய்து அனைவரையும் மிஞ்சிவிட்டார் ஸ்டாலின். ஆயிரம் ஆயிரம் சோதனைகள் வந்தாலும் அதை சந்திக்க ஆற்றலும் துணிவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிற ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு என்பதை இன்றைக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் அடக்குமுறைகளை  கொண்டுவந்தாலும் இந்த கழகத்தை, இந்த அமைப்பை, தொண்டர்களின் உணர்வுகளைப் என்றைக்கும் புறந்தள்ளிவிட முடியாது. அதை அழித்துவிட முடியாது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். தொண்டர்கள் எத்தனை அடக்குமுறைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற பெயரால் கழகத்தின் மீதும் கழகத் தலைவர் மீது சுமத்தப்படுகிறது கழகங்கள் நீதிமன்றத்தின் மூலம் உருவாக்கப்படும். 

இப்படிப்பட்ட அராஜகத்தை அடக்குமுறையை பழிவாங்கும் அரசியலை தமிழர் திருநாளாகிய பொங்கல் (Pongal) நாளில் கூட விட்டு வைக்காமல் செய்கிறார். இது நியாயம் தானா என்பதை தமிழனாக இருக்கும் அனைவரும் நினைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார். 

ALSO READ | முதலமைச்சரை ஒருமையில் பதிவிட்ட சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

ALSO READ | அரசு அதிகாரிகளின் அராஜகம்; பழங்குடியின குழந்தைகள் கல்வியை பாதியில் கைவிடும் அவலம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News