தமிழக மீனவர்களையும் அவரது படகுகளையும் விடுவிக்க கோரி நரேந்திரமோடிக்கு முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப் பட்ட படகுகள் இலங்கை யின் அரசுடைமை ஆக்கப்படும் என அந்நாட்டு மீன்வளத்துறை மந்திரி மகிந்த அமரவீரா தெரிவித் துள்ளார். அதே கருத்தைதான் இலங்கை வடக்கு மாகாண மந்திரி பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரனும் கூறியுள்ளார். இந்தியா- இலங்கை மீன்வளத்துறையினர் சந்தித்து பேசும் இத்தருணத்தில் இது மிகவும் துரதிருஷ்ட வசமானது.
எங்களது பெருமதிப்பிற் குரிய தலைவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை தாமதமின்றி விடுவிக்க வேண்டும் என்று பலதடவை வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளார்.
இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக மீனவர்கள் 114 படகுகளை விடுவிக்க வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தினார். இதே கருத்தைதான் கடந்த 31-ம் தேதி இந்தியா- இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் மட்டத்தில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தினோம். பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகு களை அரசுடைமை ஆக்கப்படும் என்ற இலங்கையின் அறிவிப்பு துரதிர்ஷ்ட வசமானது மற்றும் தேவையற்றது. இது எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இலங்கை மந்திரி களின் இத்தகைய அறிவிப்பு பல நூற்றாண்டுகளாக பாக்ஜலசந்தி பகுதியில் பாரம்பரிமாக மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் செயலாகும்.
எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு இலங்கை கடற்படையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 114 படகுகளையும், 51 மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடிதத்தில் அதில் கூறப்பட்டுள்ளது.
Honourable CM Thiru.O.Panneerselvam urges PM Modi to take immediate action to release 51 Indian fishermen and 114 boats.
— AIADMK (@AIADMKOfficial) January 2, 2017