தருமபுரி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவுற்ற 46 திட்டப் பணிகளை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தை புகழ்ந்து தள்ளினார். அவரை ’வேங்கை’ மகன் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரிடம் ஒரு வேலையைக் கொடுத்தால், அதனை மிகச்சிறப்பாக செய்து முடிப்பார் எனக் கூறினார்.
ALSO READ | தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் ₹1000 கோடி ஊழல்: H. ராஜா
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம்-தருமபுரி மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் எனக் கூறினார். அந்த புதிய சாலை 250 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளதாக கூறிய அவர், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 2ம் கட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறினார். சுமார் 4,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் முதலமைசர் தெரிவித்தார்.
மேலும், தன் வாழ்நாளில் மிக முக்கியமான திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் சுய உதவிக் குழு திட்டம் முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி தருமபுரியில் தொடங்கிவைத்ததை நினைவு கூர்ந்தார். மேலும், தருமபுரியில் புதிய பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும், புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ALSO READ | "சிவி சண்முகத்தின் டவுசரை கழட்டியவர்கள்...." - திமுக எம்எல்ஏ பதிலடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR