ஸ்தம்பித்தது சென்னை! நீண்ட நேரம் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்!

தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் கடந்த 2 நாட்களில் மட்டும் 2,34,918 பயணிகள் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால், சிறப்பு மற்றும் அரசு பேருந்துகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் ஏராளமான பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் பயணம் செய்தனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 3, 2021, 03:57 PM IST
ஸ்தம்பித்தது சென்னை! நீண்ட நேரம் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்! title=

Chennai: சென்னையில் இருந்து தீபாவளிப் பண்டிகைக்காக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையின் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேடில் இருந்து மதுரவாயில் செல்லும் சாலையில் பேருந்துகள் மெது மெதுவாக ஊர்ந்து செல்கிறது. மறுபுறம் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்த மழைக் காரணமாக சாலைகளில் நீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

அதேபோல் சென்னை நூறடி சாலையிலும் பேருந்துகள் ஊர்ந்து செல்வதைப் பார்க்க முடிகிறது. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசலால் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட நேரம் வரிசை கட்டி காத்திருந்தன. 

அனைத்து பேருந்துகளிலும் இருக்கைகள் முழுவதுமாக நிரம்பி உள்ளதால், அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், மாநகர பஸ், புறநகர் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது. 

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி, ஸ்ரீ பெருமந்தூர் சுங்கசாவடி, மேல்மருவத்தூர் அருகே உள்ள திண்டிவனம் சுங்கச் சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் கடந்த 2 நாட்களில் மட்டும் 2,34,918 பயணிகள் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால், சிறப்பு மற்றும் அரசு பேருந்துகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் ஏராளமான பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் பயணம் செய்தனர். 

இதனையடுத்து தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் முறையாக ஆவணங்கள் இல்லாத ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.

தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மக்களை அழைத்துச் செல்வதற்காக 1,540 சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கப்படும். புதன்கிழமை, சென்னையில் இருந்து மொத்தம் 3,500 பேருந்துகள் புறப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், கடந்த 48 மணி நேரத்தில் 1,88,107 பயணிகளுடன் மொத்தம் 4,785 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசல் மற்றும் போர்டிங் பாயின்ட்களில் ஏற்படும் குழப்பத்தை குறைக்கும் வகையில், நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News