நாகையில் மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்க ஆளுநருக்கு மனு!

மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே ரயில் போக்குவரத்து வசதி தொடங்க கோரி தமிழக ஆளுநர் பன்வாரி லால் அவர்களுக்கு பாஐக கோரிக்கை விடுத்துள்ளது.

Last Updated : Feb 19, 2018, 07:19 PM IST
 நாகையில் மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்க ஆளுநருக்கு மனு! title=

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே ரயில் போக்குவரத்து வசதி தொடங்க கோரி தமிழக ஆளுநர் பன்வாரி லால் அவர்களுக்கு பாஐக கோரிக்கை விடுத்துள்ளது.

சனிக்கிழமை இரவு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களிடம், இதுதொடர்பாக பாஜக நாகை மாவட்ட பொதுச் செயலாளர் அமிர்த. விஜயகுமார் கோரிக்கை மனு ஒன்றினை அளித்துள்ளார்.

இந்த மனுவில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...

"ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போது, 1926-ஆம் ஆண்டு முதல் மயிலாடுதுறை- தரங்கம்பாடி இடையே 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நடைபெற்று வந்தது. நாடு சுதந்திரமடைந்த பிறகு, 1986-ஆம் ஆண்டு முதல் இந்த தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

பொதுமக்கள், மாணவ-மாணவியர், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த வழிதடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்த நடவடிக்கை மூலம், சுற்றுலா தளமான தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்!

Trending News