புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் அரசு விழா ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன், விளையாட்டுத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக திருமண பேனர் ஒன்று அடிக்கப்பட்டிருந்தது. அதில், அமைச்சர் மெய்யநாதனின் உருவப்படமும் இருந்துள்ளது. இதனை காரில் இருந்தபடி கவனித்த அமைச்சர், வண்டியை நிறுத்தச்சொல்லியுள்ளார். பேனரை உற்றுநோக்கினால், அது நரிக்குறவர்கள் இல்லத் திருமண விழா. உடனடியாக திருமணம் நடைபெறும் வீட்டிற்கு அமைச்சர் மெய்யநாதன் சென்றார். திருமண வீட்டில் படு பிஸியாக இருந்த நரிக்குறவர்கள் அமைச்சர் வருவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் படிக்க | தீபாவளி தினத்தில் சிறப்பான நிகழ்வு; தேடி சென்று உதவி செய்த முதல்வர் ஸ்டாலின்
மகிழ்ச்சியோடு வரவேற்ற அமைச்சரை, மணமக்களிடம் அழைத்துச் சென்றனர். அங்கு மணமக்களை வாழ்த்திய அமைச்சர் மெய்யநாதன், அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அரசு விழாவுக்குச் செல்ல வேண்டும் என்று கூறிய அமைச்சரிடம், சில கோரிக்கைகளை நரிக்குறவர்கள் முன்வைத்தனர். இதனை கேட்டறிந்த அவர், நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர், மீண்டும் அரசு விழாவுக்குப் புறப்பட்டார். அரசு விழாக்களில் பங்கேற்பது, விளையாட்டுத் துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்று பரபரப்புடன் இயங்கும் அமைச்சர் மெய்யநாதன், தமிழக அரசின் ஆலோசனையின்படி செஸ் விளையாட்டுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, "செஸ் ஒலிம்பியாட் கமிட்டி" என்ற குழு அமைத்து உலக சதுரங்க போட்டிகள் நடத்தப்படும் என்ற அறிவிப்புதான் அது. 1927ம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு இந்தியாவில் இந்தப் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ‘அந்த’ டீம் இந்த தடவை Play-Offக்கே போகாது!- சாபம் விடுகிறாரா ரெய்னா?
மேலும், 200 நாடுகளுக்கு மேற்பட்ட சதுரங்க வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளதாக கூறிய அவர், 4 மாதத்தில் போட்டியை நடத்த அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், 25 கிராண்ட் மாஸ்டர்கள் சென்னையில் உள்ளதால் இந்தியாவின் சதுரங்க தலைநகராக சென்னை திகழ்வதாகவும் அமைச்சர் மெய்யநாதன் பெருமையுடன் கூறுகிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாமல்லபுரத்தில் இந்த செஸ் விளையாட்டு போட்டிகள் ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியை ஐ.பி.எல் போட்டி தொடக்கவிழா போன்று கலைஞர்களைக் கொண்டு கோலாகலமாக தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR