தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பப்பதிவும் நேற்று தொடங்கியது. ஆனால் இந்த நியமனத்தில் முறைகேடு நடப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கத் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தகுதி அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் கூறியதை ஏற்று, தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் தமிழக அரசு திருத்தம் செய்தது.
மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ரிசல்ட் எப்போது? காத்திருக்கும் லட்சக்கணக்கானோர்!
தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான நீதிமன்றத் தடையை நீக்க வேண்டுமென தமிழக அரசு இன்று நீதிமன்றத்தில் முறையிட்டது. ஆனால், தற்காலிக ஆசிரியர்களை ஏன் நியமிக்க வேண்டுமென நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க என்ன அவசரம்? அதற்குப் பதிலாக நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாமே எனக் கூறிய நீதிபதிகள், வழக்கு ஏற்கனவே பட்டியலிடப்பட்ட 8-ம் தேதியே வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறினர்.
இதனிடையே தற்காலிக ஆசிரியர்களுக்கான விண்ணப்பப்பதிவு நேற்று தொடங்கியது. நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். ஆனால், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த தடையால், அந்நீதிமன்றத்தின் கீழ் உள்ள மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | லீனாவை அரெஸ்ட் பண்ணுங்க... காளிக்கு எதிராக களமிறங்கிய ஹெச்.ராஜா
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR