மத்திய அரசை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம்

Last Updated : Oct 7, 2016, 12:09 PM IST
மத்திய அரசை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் title=

செப்.30-ம் தேதி காவிரி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அக்டோபர் 4-ம் தேதிக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான குழுவில் இடம்பெற்ற நிபுணர்கள் காவிரி நீர்ப்பாசனப் பகுதியை முழுமையாக ஆராய்ந்து வரும் 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும் என கூறி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்ததை அடுத்து திமுக சார்பில் திருவாரூர், நாகை தஞ்சை ஆகிய மாவட்டத்தில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று திமுக தலைவர் கூறியிருந்தார். இதற்கு தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஓருங்கிணைப்பு குழு, தமிழ்நாடு விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழு ஆதரவு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. முதன்மை செயலாளர் துரை முருகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடைபெறும்.

 

 

Trending News