அதிமுக ஆட்சி காலத்தில பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவினில் பல்வேறு முறைகேடுகள் நடத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகளும் எழுந்தன. அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளும் நடந்துவருகின்றன. இதனிடையே மதுரை ஆவினில் 47 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டன.
பொது மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நியமனங்கள் நேரடியாக வழங்கப்பட்டன. இதில் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரே ஊரைச் சேர்ந்தவர்களை வரவைத்து உடனே அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 17 பேருக்கு அப்படி பணி நியமனம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்திருந்தது.
அதுமட்டுமின்றி விண்ணப்பிக்காமல், நேரடித் தேர்வு, தகுதியுள்ளோரை நேர்காணலுக்கு அழைக்கப்படாதது உள்பட பல முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு, பால் வள துணைப் பதிவாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று ஆணையருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
அந்த அறிக்கையின்படி மேலாளர், முதுநிலை பணியாளர் உள்பட 47 பேர் முறைகேடாக பணியில் சேர்ந்தது அம்பலமாகி உள்ளது. இதையடுத்து மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரை நீக்கம் செய்ய பால்வளத் துறை ஆணையர் சுப்பையன் உத்தரவு பிறப்பித்துள்ளார். முறைகேடாக பணி நியமனம் நடக்க காரணமான தேர்வு குழு மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் பணம் சம்பாதிக்க 6 வழிகள்!
மேலும் படிக்க | Ind vs SL: 155கிமீ வேகத்தில் பந்து வீசிய உம்ரான் மாலிக்! என்ன ஆனது என்று பாருங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ