இளம்பெண் தற்கொலை: மர்மநபரால் பேஸ்புக் பக்கத்தில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம்

Last Updated : Jun 27, 2016, 03:51 PM IST
இளம்பெண் தற்கொலை: மர்மநபரால் பேஸ்புக் பக்கத்தில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் title=

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்தவர் வினுப்பிரியா. இவரது பேஸ்புக் பக்கத்தில் உள்ள படத்தை எடுத்து ஆபசமாக சித்தரித்து அதனை அவரது பக்கத்திலேயே மர்மநபர் ஒருவர் வெளியிட்டு உள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வினுப்பிரியா, இது குறித்து வீட்டில் தெரிவிக்க, இது தொடர்பாக அவரது பெற்றோர்கள் மகுடஞ்சாவடி காவல் நிலையம் மற்றும் சங்ககிரி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர். புகார் கொடுத்து ஒரு வாரம் கடந்த நிலையில், அந்த மர்ம நபர் மீண்டும் வினுப்பிரியா படத்தை மார்பிங் செய்து மற்றொரு ஆபாசப் படத்தை இன்று பதிவேற்றியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வினுப்பிரியா, இன்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

வினுப்பிரியாவின் தந்தை அண்ணாதுரை கூறியதாவது:- குற்றவாளியை கைது செய்யும் வரை வினுப்பிரியாவின் உடலை வாங்கமாட்டோம். வினிப்பிரியாவை பேஸ்புக்கில் ஆபாசமாக சித்தரித்தவனை உடனடியாக கைதுசெய்யவேண்டும்.10 நாட்களுக்கு முன்பே வினுப்பிரியாவின் பேஸ்புக் பக்கத்தை முடக்க கூறினோம். ஆனால் அவர் இறந்த பிறகு பேஸ்புக் பக்கத்தை முடக்கி உள்ளனர். கடந்த வாரம் புகார் கொடுத்த போதே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு உயிரை இழந்திருக்க தேவையில்லை என்று வினுப்பிரியாவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Trending News