கடலூர்: பாம்பின் முன் தீப ஆராதனை காட்டி பூஜை செய்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்!
தமிழகத்தின் கடலூர் பகுதியில் தம்பதியரின் 80-வது திருமண ஆண்டு விழாவினை கொண்டாடும் வகையில் பாம்பினை பிடித்து அதன் முன் தீப ஆராதனை காட்டி பூஜை செய்துள்ளனர்.
இந்த நிகழ்வினை சுமார் 13 நிமட வீடியோவாக WhatsApp-ல் மக்கள் பரப்பியுள்ளனர். இந்த வீடியோவானது சென்னையினை சேர்ந்த விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர் சர்வன் கிருஷ்ணன் என்பருக்கு வந்தபோது, இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பூசாரி கடந்த மே 16-ஆம் நாள் கைது செய்யப்பட்டுள்ளார். Wildlife Protection Act of 1972, Schedule II, Part II பிரிவின் கீழ் இவரது மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் கடலூர் அணைக்குப்பம் பகுதியை சேர்ந்த சுதர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது பெற்றோரின் 80-ஆம் ஆண்டு திருமணதினத்தினை கொண்டாட இந்த பூஜைகள் நடத்தப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ராஜேந்திரன் தெரிவிக்கையில்,.. வனப்பகுதியில் இருந்து பாம்பினை பிடித்து பூசாரிக்கு வழங்கிய நபர் பழனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை தேடும் பணி நடைப்பெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்!