திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு பாஜகவினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், “தமிழ்நாட்டை பாண்டியநாடு பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும் அப்போது தான் நிர்வாக ரீதியாக அதிக திட்டங்களை பெற முடியும்” என்று பேசியிருக்கிறார்.
அதிமுக விவகாரத்தில் பாஜக எப்போதுமே நடுநிலையாக நடந்து கொள்ளும் என்று நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார். “தமிழகத்திற்கு தனிநாடு அந்தஸ்து வேண்டும் என்று ஆ.ராசா கூறுகிறார். ஏன் நான் சொல்கிறேன் தமிழ்நாட்டை பாண்டியநாடு பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் பரபரப்பாக பேசினார்.
மேலும் படிக்க | EPS vs OPS - ஜெயலலிதா நாற்காலியில் எடப்பாடி... 11ஆம் தேதி பட்டாபிஷேகம்?
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தனிநாடு வேண்டும் என்பது ஆ.ராசாவின் சொந்த கருத்து. என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அங்கு கிடைத்துள்ளது. எனவே தமிழ்நாட்டை நிர்வாக ரீதியாக இரண்டாக பிரித்தால் அதிக திட்டங்களை பெற முடியும் என்று நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR