தமிழக அரசு வழங்கும் ரூ. 3000 உதவித்தொகை! யார் யாருக்கு கிடைக்கும்?

Tamilnadu Govt: தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உதவி தொகை திட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Written by - RK Spark | Last Updated : Dec 2, 2024, 11:04 AM IST
    பெண்களுக்கு மாதம் உதவித்தொகை.
    நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
    இதனால் பலர் பயனடைந்து வருகின்றனர்.
தமிழக அரசு வழங்கும் ரூ. 3000 உதவித்தொகை! யார் யாருக்கு கிடைக்கும்? title=

ஒவ்வொரு மாதமும் தமிழக மக்களுக்கு சில பயனுள்ள திட்டங்களின் மூலம் நேரடியாக பணம் கிடைக்கிறது. பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு என தமிழக அரசு 3 சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நீங்கள் ரூ. 3000 உதவித்தொகை பெறலாம். இந்த பணம் நேரடியாக உங்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்தப் பணம் ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு வாரங்களில் உங்கள் கணக்கிற்கு வந்து சேரும். இந்த மாதம், அடுத்த சில நாட்களில் பணம் வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த எந்த திட்டங்கள் மூலம் உதவித்தொகை கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | Fengal Cyclone: பெஞ்சல் புயலின் லேட்டஸ்ட் அப்டேட்! இந்த பகுதி மக்கள் ஜாக்கிரதை!

தமிழ் புதுலவன் திட்டம் 

தமிழ் புதுலவன் திட்டம் மூலம் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது போல, புதுமைப்பெண் திட்டம் மூலம் பெண்களுக்கு எப்படி ரூ. 1000 வழங்கப்படுகிறதோ, அதே போல மாணவர்களுக்கும் தமிழ் புதுலவன் திட்டம் மூலம் ரூ. 1000 வழங்கப்படுகிறது. இம்மாதம் மூன்றாவது தவணையாக ரூ. 1,000 விரைவில் வழங்கப்பட உள்ளது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்

தமிழகத்தின் புதுமை பெண் திட்டம் மூலம், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் படிப்பை பாதியில் நிறுத்தாமல் தொடர்ந்து படிப்பதற்கு ஊக்குவிக்க இந்த திட்டம் உதவுகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ. 698 கோடி ஒதுக்கப்பட்டது. புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் கடந்த மாதம் முதல்வர் முக ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. 

மேலும் அரசுப் பள்ளிகளில் இருந்து உயர்கல்வி செல்லும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இந்த சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், மாணவிகள் உயர்கல்வி படிப்பை முடிக்கும் வரை பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும். மாணவிகள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை இந்த பணம் வழங்கப்படும். இதனை பெற அவர்கள் எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அது நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் செலுத்தப்படும். இது கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

தமிழகத்தில் பெண்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தகுதி வாய்ந்த பெண்களுக்கு தமிழக அரசு மாதம் ரூ. 1000 உதவி தொகையை வழங்கி வருகிறது. முன்பு இந்த திட்டத்தில் சேர பல்வேறு விதிகளை அரசு வகுத்து இருந்தது. இந்நிலையில், தற்போது அதில் சில தளர்வுகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள், புதிதாக ரேஷன் கார்டு பெற்ற பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள் என அனைவருக்கும் இந்த உதவித்தொகை கிடைக்கும்.  பெண்களுக்கான இந்த சிறப்புத் திட்டத்தில் ஏற்கனவே உள்ள நபர்கள் தவிர, புதிய பெண்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இம்முறை சுமார் 250,000 பேர் புதிதாக சேர்க்கப்பட்டு பணம் பெற உள்ளனர். இதில், புதிதாக திருமணமான பெண்கள் மற்றும் ரேஷன் கார்டு பெற்றவர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமையன்று அவர்கள் பணத்தைப் பெறுவார்கள். இந்த மாதம் ஒவ்வொருவருக்கும் மொத்தமாக 3,000 ரூபாய் வழங்கப்படும்.

மேலும் படிக்க | Chennai Rains : இதுவரை சென்னையில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 7 இடங்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News