இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, இது வரை இல்லாத அளவில், தினசரி சுமார் 3 லட்சம் என்ற அளவில், புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன.
தமிழகத்திலும் கொரோனா பரவல், மிகவும் அதிகரித்துள்ள நிலையில், லாக்டவுன் அச்சம், மற்றும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக, வெளி மாநில தொழிலாளர்கள், தங்கல் சொந்து ஊருக்கு செல்வதற்காக, பேருந்து நிலையங்களில் கூட்டமாக கூடி வருகின்றனர். எனவே, அவர்களை வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள தொழிலாளர் துறை உதவிக் கரம் நீட்டியுள்ளது. அவர்களது, குறைகள், பிரச்சனைகளை கேட்டறியவும், அதற்கான நிவாரணங்களை வழங்கவும், தனி கட்டுபாட்டு அறையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறையை 044 - 24321408, 24321438 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொண்டு கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
ALSO READ | Free Vaccination: யாருக்கெல்லாம் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்
தொழிலாளர்களின், குறைகள், பிரச்சனைகளை கேட்டறியும் கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் அதற்கான ஆலோசனை, வழிகாட்டுதல்கள் வழங்குவதோடு, உரிய நிவாரணமும் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் , வெளி மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தங்கி, தங்கள் வேலையை தொடருவதற்கான உகந்த சூழலை உருவாக்கவும், இந்த நெருக்கடி மிகுந்த கால கட்டத்தில், வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்லாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் எவ்வித பயமோ, பதற்றமோ அடையாமல் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் தொடர்ந்து பணியாற்றுமாறும், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ள, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, சேலம், கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி ஆகிய இடங்களில், அதிக அளவில் கட்டுபாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ALSO READ | Corona Second Wave: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR