தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்ய உள்ள நிலையில் அமைச்சரவைக் கூட்டம் நாளை நடக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவப்படம் தமிழக சட்டசபையில் நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டது. படத்திறப்பு விழாவில் பேசிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில், தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் 15-ந் தேதி (நாளை) கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை நடக்க இருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட், மானியக் கோரிக்கைகள், புதிய அறிவிப்புகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும், 16-ந் தேதி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவி ஏற்று ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. அதைக் கொண்டாடும் வகையில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.