ஆளுநர்களுக்கு மரியாதையே கொடுப்பதில்லை - யாரை சொல்கிறார் தமிழிசை?

ஆளுநர்களுக்கு மரியாதையே கொடுப்பதில்லை என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 28, 2022, 05:31 PM IST
  • தமிழிசை சௌந்தரராஜனை அவமதித்த விஜயேந்திரர்
  • கோவை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழிசை சௌந்தரராஜன்
  • பொன்னாடையை தூக்கி போட்ட விஜயேந்திரர்
 ஆளுநர்களுக்கு மரியாதையே கொடுப்பதில்லை - யாரை சொல்கிறார் தமிழிசை? title=

தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சமீபத்தில் காஞ்சி விஜயேந்திரரை சந்தித்தார். அப்போது அவருக்கு அமர்வதற்கு இருக்கை கொடுக்காமல், பொன்னாடை ஒன்றை விஜயேந்திரர், தமிழிசையின் கைகளில் தூக்கி போடும் வீடியோ வெளியானது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் ஒரு ஆளுநரை இப்படி அவமதிக்கக் கூடாது, மேலும் அங்கு இருந்தவர்களில் குறிப்பிட்ட சில பேரிடம் மரியாதையுடன் நடந்துகொண்ட விஜயேந்திரர் தமிழிசையை மட்டும் அவமதித்தது கண்டிக்கத்தக்கது என கூறினர்.

Kanchi

இந்நிலையில் கோவையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழின்றி ஆன்மீகம் கிடையாது. ஆன்மீகமின்றி தமிழ் கிடையாது என்பதை மடங்கள் போதிக்கின்றன.  மடங்களின் விதிகளை மதிக்கிறேன்.

நான் சென்றாலே சிலவற்றை மாற்றி மாற்றி எழுதுகிறார்கள். அரசு மடாலயங்களை அழைத்து பேசும்போது அவர்களுக்கான இருக்கைகளை அமைத்து கொடுக்க வேண்டும் என்பது பக்தையாக எனது கோரிக்கை. காவி ஆன்மீகத்தை குறிக்கிறது. அதனால்தான் சொல்கிறேன் காவி தமிழகத்தில் பெரியது. வலியது.

 

சாதாரண மக்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள் ஆளுநருக்கு கொடுப்பதில்லை ஆளுநர்களும் ஆளுமை மிக்கவர்கள் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அவர்களும் சாமானிய மக்களில் ஒருவர்தான்” என்றார்.

மேலும் படிக்க | உதயநிதிஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு : ரத்து செய்த நீதிமன்றம்

இந்தப் பேச்சின் மூலம், ஆளுநர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என அவர் யாரை சொல்கிறார் என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. அதேசமயம், தனக்கு மரியாதை கொடுக்காத விஜயேந்திரரைத்தான் தமிழிசை சௌந்தரராஜன் சூசகமாக இப்படி கூறுகிறார் எனவும் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

மேலும் படிக்க | ஓபிஎஸ் தான் ஜல்லிக்கட்டு நாயகர்: விளக்கம் அளிக்கும் முன்னாள் முதலமைச்சர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News