புது தில்லி: நிவர் புயல் தமிழகத்தை கடந்துவிட்ட நிலையில் அடுத்த புயலுக்கான ஆயத்தங்கள் துவங்கி விட்டன. ஏற்கனவே தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலான மழை பெய்து வருகிறது. எச்சரிக்கை நிலையிலேயே இருக்கும்படி அரசாங்கமும் வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளன.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்காள விரிகுடாவில் (Bay of Bengal) அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது மேலும் தீவிரமடைந்து தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
Significant Weather Features based on 0830 hours IST of today:
A Low Pressure Area lies over South Andaman Sea adj SE Bay of Bengal & Equatorial Indian Ocean. It is very likely to concentrate into a Depression during next 48 hours and likely to intensify further thereafter.— India Meteorological Department (@Indiametdept) November 28, 2020
இதன் தாக்கத்தில், தென் மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் 1 முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று IMD தொடர்ச்சியான ட்வீட்டுகளில் தெரிவித்துள்ளது.
"புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு அது மேலும் தீவிரமடையக்கூடும்" என்று IMD கூறியுள்ளது.
இது ஏறக்குறைய மேற்கு நோக்கி நகர்ந்து தென் தமிழக கடற்கரையை டிசம்பர் 2 ஆம் தேதிக்குள் அடைய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது IMD.
ALSO READ: அடுத்த வாரம் தமிழகத்தில் அதிக மழை பெய்யும்: வானிலை மையம்
இந்த காற்றழுத்தம் காரணமாக, செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் தமிழ்நாடு (Tamil Nadu), புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, லட்சத்தீவு, தென் கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு ராயலசீமா ஆகிய பகுதிகளில் பரவலான மழை பெய்யும் என வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் தமிழகம், புதுச்சேரி (Puducherry) மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மற்றும் மிக அதிக மழை பெய்யும் என்றும் IMD கணித்துள்ளது.
டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் தென் கரையோர ஆந்திரப் பிரதேசத்திலும், புதன்கிழமை ராயலசீமா மற்றும் லட்சத்தீப் பகுதிகளிலும் மிதமான மழையும் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ALSO READ: நிவர் புயல்; பாதிப்புகளை சரி செய்ய, நிவாரணம் வழங்க நடவடிக்கை தேவை: PMK
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR