தமிழகம், புதுச்சேரி: 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை இருக்கும்-IMD

சென்னையிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இன்றைய வானிலையைப் பொறுத்தவரை , இன்று மதியம் வரை நல்ல மழை இருக்கும் என பிராந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 15, 2021, 10:37 AM IST
  • அதிகாலை முதல் சென்னையிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
  • அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் புதுச்சேரியிலும் நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
  • கோடை காலத்து மழை மக்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி: 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை இருக்கும்-IMD title=

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை, கோடையிலும் மக்களுக்கு குதூகலத்தைக் கொண்டு வந்துள்ளது. சென்னையிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இன்றைய வானிலையைப் பொறுத்தவரை , இன்று மதியம் வரை நல்ல மழை இருக்கும் என பிராந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் (Tamil Nadu), சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையில் நேற்று பகலில் மிதமான மழை பெய்த நிலையில் இன்று அதிகாலை முதல் கனமழை கொட்டி வருகிறது. இன்று காலை முதல், ராமாபுரம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், விருகம்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பம்மல் பகுதியில் இடியுடன் கனமழை பெய்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் மட்டுமல்லாமல், பெருங்களத்தூர், வண்டலூர் போன்ற சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. 

ALSO READ: தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா, ஒரே நாளில் 7,819 புதிய பாதிப்புகள்

முன்னதாக, அடுத்த மூன்று நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் (Puducherry) 30 முதல் 40 கி.மீ வேகத்தில் மின்னலுடன் கூடிய இடி மழைக்கான வாய்ப்பு உள்ளதாக புதன்கிழமையன்று தெரிவித்தது. மேலும், பல இடங்களில் பலத்த காற்றும், காற்றுடன் கூடிய மழையும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் வியாழனன்று பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர்  மாவட்டங்களிலும் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய வானிலை ஆய்வு மையத்தின் மைய இயக்குநர் என் புவியரசன் தெரிவித்தார். சென்னையைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டமாக காணப்படும். 

இதற்கிடையில், மாநிலத்தின் சமீபத்தில் பெய்து வரும் மழை (Rain), வெப்பநிலையை கட்டுக்குள் வைத்துள்ளது. சென்னையில் ஏப்ரல் மாதத்தின் சராசரி பகல்நேர வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ் ஆகும். மழையின் காரணமாக இந்த அளவிலிருந்து வெப்பநிலை அதிகரிக்காமல் உள்ளது. மாதத்தின் தொடக்கத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் இதில் சிறிய அதிகரிப்பைக் காண முடிந்தது. 

ALSO READ: தொழிற்பயிற்சி பெற்று அசத்தும் ஜாமிலாபாத் பெண்கள், கைகொடுக்கும் கைவினைக் கலைகள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News