Tamil Nadu Lok Sabha Election Result: சோகத்தின் உச்சத்தில் அதிமுக! வெறும் இத்தனை இடங்கள் தான் கிடைக்குமா?

Tamilnadu Lok Sabha Election Result 2024 live: மக்களவை தேர்தல் தொடர்பாக வெளியான கருத்து கணிப்புகளில் திமுக தலைமையிலான கூட்டணி 33-37 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Jun 4, 2024, 07:48 AM IST
  • பாஜகவுடன் கூட்டணியை முறித்த அதிமுக.
  • இந்த தேர்தலில் தனித்து களம் கண்டது.
  • 3 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது.
Tamil Nadu Lok Sabha Election Result: சோகத்தின் உச்சத்தில் அதிமுக! வெறும் இத்தனை இடங்கள் தான் கிடைக்குமா? title=

Tamilnadu Lok Sabha Election Result 2024 live: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை மீண்டும் பாஜக தான் ஆட்சிக்கு வரும் என்று கூறப்படுகிறது, இருப்பினும் பெரும்பான்மை கிடைப்பது சந்தேகமே. இந்நிலையில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது பெரிய கட்சி என்ற அளவில் உருவெடுத்துள்ளது. இந்த முறை திமுக மற்றும் அதிமுகவை தாண்டி மூன்றாவது முக்கியமான கட்சியாக பாஜக பார்க்கப்பட்டது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் மும்முனைப் போட்டியாக இருந்தது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்தன.

மேலும் படிக்க | Krishnagiri TN Election Result 2024: கிருஷ்ணகிரியில் வெற்றிக் கனி யாருக்கு கிடைக்கும்..!!

தற்போது இவர்களை தாண்டி பாஜக முக்கிய வாக்கு வங்கியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் மாநில மற்றும் தேசியத் தலைவர்களின் தீவிர பிரச்சாரத்தின் மூலம் கூடுதல் வாக்குகளை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று காட்சிகளை தாண்டி சீமானின் நாம் தமிழர் கட்சியும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இவர்கள் பெரும் ஓட்டுகள் வெற்றியை மாற்றுகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் இருந்தது. தற்போது மக்களவை தேர்தல் 2024ஐ மையமாக வைத்து கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது. அதில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் பெரிய கட்சியான அதிமுகவை விட பாஜகவிற்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. திமுகவுக்கு 20-22 இடங்களும், காங்கிரஸுக்கு 6-8 இடங்களும், அதிமுகவுக்கு 0-2 இடங்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 1-3 இடங்கள் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 இடங்களில் 38 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுகவைப் பொறுத்தவரை இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் தனியாக கலம் கண்டது. 2019 தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து போட்டியிட்டன. இந்த முறை பாஜகவுடனான உறவை அதிமுக கடந்த செப்டம்பர் மாதம் முறித்துக் கொண்டது.

மேலும் படிக்க | Cuddalore Lok Sabha Election Result 2024: கடலூரின் கிங் யார்? லேட்டஸ்ட் அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News