தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) கடந்த 16-ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. அதன் படி தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது. ஒரு மருத்துவர் என்கிற முறையில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி குறித்த நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போட்டுக்கொள்வதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் (Vijayabaskar) தெரிவித்துள்ளார்.
ALSO READ | பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு தடுப்பூசி எப்போது... வெளியான தகவல்..!!!
நேற்று வரை 42,947 பேருக்கு தமிழகத்தில் கோவாக்சின் (Covaxin) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் துணை தலைவர், மருத்துவர் மகேந்திரன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
Tamil Nadu Health Minister, Dr C Vijayabaskar takes Covaxin shot in Chennai.
He tweets, 'I am doing this as a doctor & member of IMA, to instill confidence among Health Care Workers. I request all to get vaccinated and safeguard themselves from #COVID19.' pic.twitter.com/xnAOSxgaaQ
— ANI (@ANI) January 22, 2021
இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவர் தமிழகத்தில் (Tamil Nadu) கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் 908 ஆவது நபர். சில தினங்களுக்கு முன்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் என்பது குறிபிடத்தக்கது.
ALSO READ | COVAXIN கடுமையான பக்க விளைவை ஏற்படுத்தினால் இழப்பீடு வழங்கப்படும்: Bharat BioTech
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR