Tamil Nadu Covid Update: சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சுகாதார அதிகாரிகளுடனான தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையின் ஆலோசனைக்கூட்டத்தினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்," மாநில சுகாதார பேரவையை கடந்தாண்டு இதே நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மாநில சுகாதாரப் பேரவை இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த சுகாதார பேரவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியா மட்டுமில்லாமல் மீண்டும் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உயர்ந்து வருகிறது. தற்போது வெளிநாடுகளில் இருந்து வருவாருக்கு விமான நிலையங்களில் 2 சதவீதம் ரேண்டம் பரிசோதனை செய்தால் அதில் 10 பேருக்கு தொற்று ஏற்படுகிறது.
மேலும் படிக்க | கலாசேத்ரா பாலியல் துன்புறுத்தல் விவகாரம்... ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியது என்ன?
தாயகம் திரும்புவோருக்கு கொரோனா
நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள 11,300க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் என்று மருத்துவமனைக்கு வரும் அனைவரும் 100 சதவிதம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதனால், யாரும் பதற்றம் அடைய வேண்டிய அளவிற்கு பாதிப்பு கிடையாது. நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம் என்பதால் முதலில் மருத்துவமனையில் இருந்து முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.
முன்னதாக, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ நல வாழ்வு மையம் மற்றும் இலஞ்சி மன்றம் என்ற சித்த மருத்துவ பள்ளி சுகாதார திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர், "ஒமைக்ரான் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு மகாராஷ்டிரா,டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் 400 முதல் 600 பேர்க்கு ஏற்பட்டிருக்கிறது, ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை 112 பேர்க்கு மட்டுமே ஏற்பட்டிருக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து பன்னாட்டு விமானநிலையங்கள் மூலமாக தாயகம் திரும்புவோர்க்கு செய்யப்படும் வைரஸ் சோதனைகளில் பெரும்பாலானோர்க்கு தொற்று அதிகரித்துள்ளது" என கூறியிருந்தார்.
மேலும் படிக்க | அமித் ஷா சொன்னார் முன்னே... இபிஎஸ் உறுதிசெய்தார் பின்னே... அப்போ அண்ணாமலை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ