தமிழகத்தில் 74 வது குடியரசு தினவிழாவில் ஆளுநர் RN ரவி தேசிய கொடி ஏற்றுகிறார்

Happy Republic Day 2023: 74 வது குடியரசு தின விழாவை தேசிய கொடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி ஏற்றி வைக்கிறார். மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெறுவதால் இந்த குடியரசு தின விழா உழைப்பாளர் சிலை அருகே நடைபெறுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 26, 2023, 12:00 PM IST
  • சென்னையில் 74 வது குடியரசு தின விழா
  • தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
  • உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் 2023 குடியரசு தின விழா
தமிழகத்தில் 74 வது குடியரசு தினவிழாவில் ஆளுநர் RN ரவி தேசிய கொடி ஏற்றுகிறார் title=

சென்னை: 74 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் குடியரசு தின விழா நடைபெறுவது வழக்கம் ஆனால் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெறுவதால் இந்த குடியரசு தின விழா உழைப்பாளர் சிலை அருகே நடைபெறுகிறது.  இவ்விழாவில் தேசிய கொடியை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்கிறார். இந்த விழாவில் முப்படை வீரர்கள், காவல் துறை சிறப்பு படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சென்னையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் 

அணிவகுப்பு நிகழ்ச்சியில், பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனை தொடர்ந்து துறை ரீதியான சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு

இதில், முப்படை வீரர்கள், காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோர் அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த வருடம் பெண்கள் சிறப்பு காவல் படையின் கூட்டுக்குழு முரசு இசை நிகழ்ச்சியானது சேர்க்கப்பட்டுள்ளது. குடியரசு  தினத்தை  முன்னிட்டு  2000 த்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் மெரினா கடற்கரை பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க | குடியரசு தின சிறப்பு விருந்தினராக வந்துள்ள எகிப்து அதிபர் அப்துல் ஃபதா எல் சிசி!

கொரோனா பாதிப்பு

கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த ஆண்டு  பள்ளி, கல்லூரி மாணவிகளின் மயிலாட்டம் காவடியாட்டம் பொய்க்கால் ஆட்டம், பிற மாநில நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெறுகிறது.

குடியரசு தின விழா 2023

இன்றைய குடியரசு தின விழாவில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்ந்த இரண்டு வாகனங்கள், காவல் துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சுற்றுலாத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறை சார்ந்த அலங்கார ஊர்திகள் இடம் பெற உள்ளது.

மேலும், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை, பொதுத் தேர்தல்கள் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, வனத்துறை, இருந்து சமய அறநிலையத் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நெய்வேலி லிக்னைட் கார்பரேசன் லிமிடெட், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை ஆகிய துறை சார்ந்த அலங்கார ஊர்திகள் இடம் பெற உள்ளது.

மேலும் படிக்க | குடியரசு தின பாதுகாப்பு எதிரொலி; முக்கிய வழித்தடங்களில் ரயில்கள் ரத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News