சென்னை: திருமணத்திற்கு இ-பாஸ் பதிவு செய்வது தொடர்பான விதிமுறைகளை மீறினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாம் கட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த லாக்டவுன் தற்போது படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படுகிறது.
அதன்படி சில மாவட்டங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
Also Read | Lockdown Update: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரசு பஸ் சேவை தொடக்கம்
இ-பாஸ் தேவையுள்ள மாவட்டங்களில் திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரே பதிவாக செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
திருமணத்தில் கலந்துக் கொள்வது தொடர்பாக தவறான தகவல் கொடுத்தாலும், குறிப்பிட்ட அளவுக்கு அதிகமானோர் ஒரு திருமண நிகழ்வில் கலந்துக் கொள்வதற்கு பதிவு செய்திருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருமணங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. ஆனால், அவற்றை பதிவு செய்யும்போது ஏற்படும் சிறு தவறுகள் கூட பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திவிடக்கூடும். எனவே திருமணங்களை பதிவு செய்யும்போது ஏதேனும் தவறு நேரிட்டால் கிரிமினல் அல்லது சிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Also Read | TN Assembly: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR