Tamil Nadu Free Counseling | 10, 12 ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளுக்கு அடுத்து என்ன படிக்கலாம்? என்ற சந்தேகம் இருக்கும். அவர்கள் யாரை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்பது என தெரியாமல், சுவர் விளம்பரங்களை பார்த்து போலி இடைத்தரகர்கள் கொடுக்கும் ஆலோசனையின் அடிப்படையில் தவறான படிப்புகளை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இதற்காக பணத்தையும் இழக்கின்றனர். ஆண்டுதோறும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த மாஃபியாக்களை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசே உயர்கல்வி ஆலோசனை வழங்கும் வகையில் இலவச உதவி மையம் அமைத்து அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது பெற்றோர்களுக்கு மாணவர்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ். இனி உயர்கல்வி படிப்பு தொடர்பான ஆலோசனைகளுக்கு பெற்றோர்களும் மாணவர்களும் எந்த இடைத்தரகர்களையும் நம்பி ஏமாற தேவையில்லை.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் (Govi. Chezhian) அறிவிப்பு ஒன்றை விடுத்திருக்கிறார். அதில், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவ, மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பட்டப் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர்கள் சேர்க்கை முதலான விவரங்கள் அனைத்தையும் வழங்கும் உதவி மையம் (Help Desk) அமைக்கப்படும் என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார். இந்த உதவி மையம் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர். பெற்றோர், பொதுமக்கள் ஆகியோருக்குத் தேவைப்படும் தகவல்களை வழங்கும். அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்த உதவி மையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
" தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள்/சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டுவருகின்றன.
இக்கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியருக்கு வெளிப்படையான பதிலளிக்கக்கூடிய மற்றும் அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கைக்காகவும் மற்றும் இதர காரணங்களுக்காகவும் மேற்குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு வருகை தரும் மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு பட்டப்படிப்புகள், பட்டமேற்படிப்புகள், ஆராய்ச்சிப்படிப்புகள், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்கள், துறை அலுவலகங்களின் அமைவிடம் ஆகிய தகவல்கள் வழங்கப்படும்.
தனியர்களின் கோரிக்கை தொடர்பாக எந்த அலுவலரை அணுகுவது?, அலுவலக நடைமுறைகள், தனியர்களின் கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள ஏதுவாக மேற்குறிப்பிட்டுள்ள உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அக்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம்" (Hop Desk) கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும். இந்த மையம் பயனாளிகளுக்கு எளிதில் உதவும் வகையில் ( user friendly) அமைக்கப்படும்" என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ராணுவ வீரர்களை திடீரென சந்தித்த தவெக தலைவர் விஜய்!! காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ