உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை: ஸ்டாலின்!

உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடாது என்ற எண்ணத்தில்தான் தமிழக அரசு செயல்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல்..!

Last Updated : Nov 15, 2019, 12:16 PM IST
    1. உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடாது என்ற எண்ணத்தில்தான் தமிழக அரசு செயல்படுகிறது.
    2. உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று தான் நீதிமன்றம் சென்றோம்.
    3. உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை
உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை: ஸ்டாலின்! title=

உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடாது என்ற எண்ணத்தில்தான் தமிழக அரசு செயல்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல்..!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக, தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. சென்னையில் 5,200 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றது. சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநகராட்சி ஆணையர், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 37 பேர் மற்றும் தேர்தல் பணியாளர்கள் 40 ஆயிரம் பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு மாநில தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழக அரசு செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்; "தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்தவேண்டும் என்றுதான் நாங்கள் நீதிமன்றம் சென்றோம். தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது திமுகவின் கோரிக்கை அல்ல". 

ஆனால், உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்பதில் அதிமுக கவனமாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர்கள் திட்டமிட்டு தொடர்ந்து பொய் கூறுகின்றனர். தேர்தலை நடத்தக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழக அரசு தான் செயல்படுகிறது. பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்தல் நடைமுறை என்ன? என்பதை விளக்க வேண்டும். எந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் வந்தாலும், சந்திக்க திமுக தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.  

 

Trending News