சென்னை: கட்டாயமாக இந்தியைப் புகுத்தி மற்றுமொரு மொழிப்போரைத் திணிக்காதீர்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், ஒன்றிய அரசு ஒற்றுமையைக் காத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மொழி என்பது மனிதனை அடையாளப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். மொழி தானும் வளர்ந்து, தன்னைப் பயன்படுத்தும் மனிதனையும் வளர்க்கும் தனியாற்றல் பெற்றது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எண்ணத்தின் வடிவமாகவும் நாகரிகத்தின் சின்னமாகவும் திகழும் மொழி, மனிதகுலத்தின் கருத்துப் பரிமாற்றத்தை செய்வதோடு மனித சமுதாய இணைப்புக்கும் துணை செய்கின்றது. உலக அறிஞர்களால் போற்றிப் பாராட்டப்படும் தமிழ், தமிழகத்தின் ஆட்சி மொழியாகும். செம்மொழியான தமிழ் மொழி, நீண்ட பாரம்பர்யத்தைக் கொண்ட தொன்மையான மொழியாகும்.
மேலும் படிக்க | பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உலக அளவில் பதிவு செய்த கஷ்மீரி பெண்கள்
கட்டாய இந்தியைப் புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர் என்றும், ஒன்றிய அரசு ஒற்றுமையைக் காத்திட வேண்டும் என்றும் அறிக்கை விடுத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“கட்டாய இந்தியைப் புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர்!
ஒன்றிய அரசு ஒற்றுமையைக் காத்திட வேண்டும்” என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். pic.twitter.com/K3OC2bNq1g
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 10, 2022
நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்றைக் கட்டாயமாக்க முயல்வது என்பது இந்தியை பேசுபவர்கள் மட்டுமே, இந்தியக் குடிமக்கள் என்பது போல தோன்றுகிறது.
இந்தியாவின் பிற மொழிகளை பேசுவோர், இரண்டாந்தர குடிமக்கள் என்பது போல தோன்றச் செய்கிற பிரித்தாளும் தன்மையைக் கொண்ட கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்தித் திணிப்பை தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் உட்பட அவரவர் தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்தவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று, தனது அறிக்கையில் ஸ்டாலில் தெரிவித்துள்ளார்.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை சரிசமாக நடத்திட வேண்டும். அனைத்து பிரந்திய மொழிகளும், மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், அதற்கு நேர் எதிராக மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து இந்தியை திணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க | நயன்தாராவின் குழந்தைகள் உயிர் மற்றும் உலகம்: புகைப்படங்கள் வைரல்
இந்தியை கட்டாயமாக்க முயன்று, இந்தி திணிப்பு என்ற கொள்கையால், மற்றுமொரு மொழிப்போரை திணித்திட வேண்டாம் என்றும், இந்தி மொழியை கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, இந்தியாவின் ஒற்றுமைச் சுரரை காத்திட வேண்டும் என மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ