தமிழக வனத்துறை அலுவலகத்தில் முதல் திருநங்கை

Last Updated : Dec 7, 2019, 11:08 AM IST
தமிழக வனத்துறை அலுவலகத்தில் முதல் திருநங்கை title=

நீலகிரி மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் முதல் திருநங்கை ஒருவர் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்துள்ளார்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் நீலகிரி மாவட்ட வனத்துறையில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு மதுபாலன் என்ற மகனும், தீப்தி என்ற திருநங்கையும் உள்ளனர்.

கடந்த 2007-ம் ஆண்டு நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியனின் வேலையை அவரது வாரிசான தனக்கு வழங்கும்படி தீப்தி அரசுக்கு விண்ணப்பித்தார். ந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, நீலகிரி மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் தீப்திக்கு பணியிடம் ஒதுக்கி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஊட்டியில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் மாவட்ட வன அதிகாரி குருசாமியிடம், தீப்தி பணி நியமன ஆணையை காண்பித்து பணியில் சேர்ந்தார். அவருக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டு உள்ளது. 

Trending News