10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு... முழு அட்டவணை இதோ!

Tamil Nadu Public Exams Schedule: தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 16, 2023, 07:09 PM IST
  • செய்முறை தேர்வுகளின் தேதியும் அறிவிக்கப்பட்டது.
  • மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்பிற்கு தேர்வு முடிவுகள் வெளியாகும்.
  • மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பிற்கு தேர்வு முடிவுகள் வெளியாகும்.
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு... முழு அட்டவணை இதோ! title=

Tamil Nadu Public Exams Schedule: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றூண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த சந்திப்பில், தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 10, 11, 12ஆம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு ஆகியவற்றின் தேதியை இன்று அவர் அறிவித்தார். 

12ஆம் வகுப்பு தேர்வு

12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 17ஆம் தேதி முடிவடைகிறது. மேலும் எழுத்துத் தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி நிறைவடைகிறது. பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பு தேர்வு 

11ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 24ஆம் தேதி முடிவடைகிறது. எழுத்துத் தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் தேர்வு முடிவு மே 14ஆம் தேதி வெளியாகும்.

மேலும் படிக்க | தோழர் சங்கரய்யா வாழ்க்கை வரலாற்றில் முக்கிய அம்சங்கள்

10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

10ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் அடுத்தாண்டு பிப். 23ஆம் தேதி தொடங்கி, பிப். 29ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எழுத்துத் தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி, ஏப். 8ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 26 (செவ்வாய்) - தமிழ்  மற்றும் இதர மொழிப்பாடங்கள்

மார்ச் 28 (வியாழன்) - ஆங்கிலம்

ஏப். 1 (திங்கள்) - கணிதம்

ஏப். 4 (வியாழன்) - அறிவியல்

ஏப். 6 (சனி) - விருப்ப மொழிப்பாடம்

ஏப். 8 (திங்கள்) - சமூக அறிவியல்

10, 11, 12ஆம் வகுப்புக்கான இந்த பொதுத்தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிவரை நடைபெறும். அதாவது காலை 10 மணி முதல் 10.10 மணிவரை வினாதாளை வாசிக்க நேரம் கொடுக்கப்படும். அடுத்து காலை 10.10 முதல் 10.15 வரை குறிப்பிட்ட தேர்வரை சரிபார்க்க தேர்வாளருக்கு நேரம் கொடுக்கப்படும். காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு எழுத சரியாக மூன்று மணிநேரம் கால அவகாசம் வழங்கப்படும். 

மேலும் படிக்க | பயிர்க்காப்பீட்டுக்கு கால அவகாசம்... அமைச்சர் விளக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News