உங்களை பாதுகாத்து கொள்வதே குடும்பத்தினருக்கு நீங்கள் தரும் பரிசு: ரஜினி

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் அரசுகள் விதிக்கும் விதிமுறையை கடைபிடிக்குமாறு  ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம் வேண்டுகோள்!!

Last Updated : Apr 14, 2020, 05:46 PM IST
உங்களை பாதுகாத்து கொள்வதே குடும்பத்தினருக்கு நீங்கள் தரும் பரிசு: ரஜினி  title=

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் அரசுகள் விதிக்கும் விதிமுறையை கடைபிடிக்குமாறு  ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம் வேண்டுகோள்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், ஆயிரத்து 36 பேர் குணடைந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால், கடந்த 24 மணி நேரத்தில் 1211 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு இருப்பதாகவும், 31 பேர் பலியாகி இருப்பதாகவும் கூறினார். அதே போன்று கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் குணமடைந்து இருப்பதாகவும், இதுவரை 1036 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாகவும் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், கொரோனா பரவலை தடுக்க அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது... வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு இந்த புதிய ஆண்டு ஒரு இனிதானா ஆண்டாக அமையட்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே பாதித்துள்ளது. இதற்க்கு இந்தியாவோ, தமிழ்நாடோ விதிவிழக்கு அல்ல. உங்களை பிரிந்து வாழும் உங்கள் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் எந்த நேரமும் உங்களை பற்றிதான் சிந்தனை, உங்களை பற்றிய கவலை. நீங்கள் எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ அந்த நாட்டின் அரசு என்ன கட்டுப்பாடுகள் வித்து உள்ளனரோ... அதை தவறாது கடைபிடித்து உங்களை நீங்க்கள் பாதுகாத்துக் கொள்ளுங்ககள். இதுதான் நீங்க்கள் உங்கள் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் நீங்கள் தரும் இந்த ஆண்டின் பரிசு..

நலமுடன் வாழ்க... கவலை வேண்டாம்... எதுவும் கடந்து போகும்...." என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Trending News